சிந்திக்க மட்டுமல்ல வாழ்க்கைக்கும் 2 --------அஹமது அலி
அறிவின் கருவூலம் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் தம் மாணவர்களுக்கு கல்விக்கு வடிவம் கொடுத்து விளக்கமளித்த நிகழ்வை பார்ப்போம்..
1.கல்விக்கு தலை உண்டு !
அது பணிவு!
ஒருவன் தலையில் பாரம் வைக்க வைக்க அவன் எவ்வளவு பணிவானோ அது போல ..
ஒருவனிடம் கல்வி அதிகமாக அதிகமாக அவனிடம் பணிவு வர வேண்டும் .
2. கண் -
அது பொறாமையில்லா கல்வியும், குறையில்லா கல்வியும் ஆகும்.
3.காது-
அது கற்கும் கல்வியை சரியாக விளங்குதல்.
4.மூக்கு-
அது தாம் கற்ற கல்வியின் வழி ஆய்வு செய்தல்.
5. நாவு -
அது உண்மை, உண்மையாக கற்க வேண்டும், உண்மைகளை கற்க வேண்டும்.
6. கை-
அது பயன், பயன் தரும் கல்வியே கை போன்றது.
7.கால்-
கற்றுக் கொடுத்த ஆசிரியரை சந்திக்கும் கல்வி,
ஆசிரியரை என்றும் மறவாமல் அவருடன் சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்வது
8.உயிர்-
கல்வியின் உயிர் ஒழுக்கம்.
கற்ற கல்வியின் வழி ஒழுக்கம் பேணுதல்