காலங்கள் மாறலாம்

காலங்கள் மாறலாம்!!!

காற்றுகள் வீசும் அந்த
காற்றுகள் கவிதைகளாய் மாறும்...

இலைகள் உதிரும்...அந்த
உதிர்வில் இசைகள் கேட்கும்...

மழைகள் பெய்யும் அந்த
மழையில் இடியும் மின்னலுமாய்....

ஒரு அரங்கேற்றம் நடக்கும்
குளிர் நடுங்கும், பனி பெய்யும்

அந்த உடல் நடுக்கத்தில் உடலில்
ஒரு இசை கச்சேரி நடக்கும்

காலங்கள் மாறும் போது நமக்குள்
ஒரு இன்னிசை கச்சேரி நடக்கும்...

மழை காலங்களின் ஒரு மண் வாசனை
காற்றில் ஒரு சுக வாசனை

குளிரில் ஒரு சுக வேதனை
மொத்தத்தில் காலங்கள் மாறும்

போது நமக்குள் ஒரு உடல் வேதனை
இதுவே காலங்களின் ஆராதனை...

எழுதியவர் : அ.மன்சூர் ali (16-Nov-14, 2:45 pm)
Tanglish : kaalangal maralaam
பார்வை : 206

மேலே