தாய் தந்தை அன்பு

(தாய் தந்தை அன்பிற்கு சமர்பணம்)

அப்பன் 'ஓர்துளி'கொடுத்தான்
அன்னை 'ஓருடல்'கொடுத்தாள்
அன்றுமுதல் உருவானோம்
அன்புமட்டும் காட்டிவந்தார்.

மகவொன்று பிறந்தபின்னர்
மணவாளனை தள்ளிவைத்து
சுகமெல்லாம் உதறிவிட்டு
சுமந்தாள் அன்னைனமை.

பிள்ளையொன்று பிறந்தபின்னர்
பெண்டாட்டி சுகமொதிக்கி
தொல்லையெல்லாம் பொறுத்து
தோளிலிட்டு வளர்த்தார் .

அன்றாடம் கஞ்சிதான்
அதிகபட்ச உணவானாலும்
அள்ளிநமக்கு வைத்துவிட்டு
அருகிருந்து ரசித்திருந்தார்.

நோய்வந்து படுக்கையிலே
காய்ச்சலில் துடிக்கயிலே
நாய்போல் அலைந்து
பேணிவந்தார் பெற்றோர்.

கிழவியின் முகங்களென
கீறிட்ட சாலையில்
பள்ளியில் சேர்த்து
பார்போற்ற பார்த்திருந்தார்.

சுடராய் நாமிளர
மெழுகாய் தானுருகி
தள்ளாடும் காலம்வரை
நமக்காக வாழ்ந்தவர்கள் .

இன்னும் எவ்வளவோ
இருக்கிறது சொல்வதற்கு
கவிதையிலும் அடங்காது
அவர்செய்த தியாகமெல்லாம்.

தாயின்றி தந்தையின்றி
தரணியில் பிறந்தோரில்லை
சேயினை வளர்பதற்கு
பட்டபாடு கொஞ்சமில்லை
இதைநீர் படித்தபின்பு
இமைமூடி சிந்திப்பீர்.
முதியோர் இல்லங்களை
மூடிடுவீர் மூடர்களே...


L.பிரசாந்த்
நான்காம் ஆண்டு,
கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறை,
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி,
பாச்சல்,
நாமக்கல்-637018.

எழுதியவர் : பிரசன்னதாசன் (16-Nov-14, 6:28 pm)
பார்வை : 214

மேலே