தாயின் அன்பு முத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
நான் கருவிலிருந்தபோதே
என்னை நிழற்படத்தில் முத்தமிட்டவள்
நான் பிறந்தபோது
என் நெற்றியில் அன்பால் முத்தமிட்டவள்
நான் தவழ்ந்தபோது
என்னை தாலாட்டி தலையில் முத்தமிட்டவள்
நான் தள்ளாடி நடந்தபோது
என்னை தட்டிக்கொடுத்து முத்தமிட்டவள்
நான் வளர்ந்தபோது
என்னை தட்டிக்கொடுத்து கன்னத்தில் முத்தமிட்டவள்
மழையைக்காட்டிலும் என் தாய்
மிகச்சிறந்தவளாகிவிட்டால்-ஆம்
அன்பு முத்தத்தை மழையாகப்பொழிவதில்
தாய்க்கிணை வேறு எவருமிலர்
இப்போது முழுவதும் நனைந்துவிட்டேன்
அவளின் அன்பு முத்தத்தில்
மீண்டும் ஏங்குகிறேன் அவளின் அன்பு
முத்தமழையில் நனைய,கருவிலிருந்தேபெற
ச.வெங்கடேசன்(14-PB -053),லயோலா கல்லூரி,நுங்கம்பாக்கம்,சென்னை-600 034.