prasanth - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : prasanth |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 02-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 8 |
இன்று எப்பொழுது கல்லூரி மாணவர்களுக்காண கவிதை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்?
கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் பங்குபெற்று படைப்புக்களை பகிர்ந்த அணைத்து மாணவ / மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் பங்குபெற்று படைப்புக்களை பகிர்ந்த அணைத்து மாணவ / மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
இன்று எப்பொழுது கல்லூரி மாணவர்களுக்காண கவிதை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்?
தோழமைகளே!! நான் இரண்டு வருடமாக graphic designer ஆகா வேலை செய்து வருகிறேன்... இந்த வேலையின் தமிழ் பெயர் என்ன ??? நெடுநாளாக தேடிவருகிறேன் தயவுகூர்ந்து ஆராய்ந்து கூறுமாறு கேட்டுகொள்கிறேன்...அப்படி ஏதும் இல்லை என்றால் ஒரு நல்ல பெயர் சூட்டுக!!
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
விதி என்றால் என்ன ?
விதியின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா ?
அறிவெல்லாம் கொடுப்பதற்கு
அப்பன் காட்டிய
கருவறை –வகுப்பறை.
நண்பர்களை தேடியே
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
நல்லொழுக்கம் பயில்வதற்கு
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
என்னை வழிநடத்த
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
திறமையை வளர்த்தெடுக்கும்
ஆசிரியர் இருக்கும்
கருவறை –வகுப்பறை.
கல்லாத மூடரே
இல்லாமல் மாற்றிடும்
கருவறை –வகுப்பறை.
படிப்பும் பகுத்தறிவும்
பிறர்போற்றும் புகழுந்தரும்
கருவறை –வகுப்பறை.
பழமையை போற்றியும்
புதுமையும் சேர்த்திடும்
கருவறை –வகுப்பறை.
அறிவெனும் உன்னத
இறைவன் இருக்கும்
கருவறை –வகுப்பறை.
உன்னை அறிந்திட
நீயும் செல்வாய்
கருவறை –வகுப்பறை.
அடுத்த தலைமுறையே!
அலங்கார பெட்டகமே!
ஏடெடுத்து படிச்சிகோங்க,
எல்லாம் தெரிஞ்சிகோங்க,
நாடாளும் தலைவர்களா
நாளைக்கு வாரயில,
ஏழைய நினைச்சிகோங்க
எப்போதும் சேவையிலே
வல்லரசு ஆகவேண்டாம்
நல்லரசு ஆட்சிபோதும்.
பணக்கார தேசம்வேண்டாம்
பசியில்லா மக்கள்போதும்.
கள்வர்கள் பயமின்றி
கண்ணுறங்கும் காலம்வேண்டும்.
கொள்வார்கள் எல்லோரும்
கொடுப்பதற்கு வரவேண்டும்
கொடுப்பதற்கு மனம்வந்து
கொடுப்பார்கள் நின்றாலும்
பெறுவதற்கு யாருமில்லா
பெருமைகொள்ளும் நிலைவேண்டும்.
காதலுக்கு சின்னம்வைத்து
கட்டிலிலே பதித்தபின்பு
மோதலென்று சொல்லி
முடித்துவிட நினைக்காமல்
கடைசிநாள் வர
(தாய் தந்தை அன்பிற்கு சமர்பணம்)
அப்பன் 'ஓர்துளி'கொடுத்தான்
அன்னை 'ஓருடல்'கொடுத்தாள்
அன்றுமுதல் உருவானோம்
அன்புமட்டும் காட்டிவந்தார்.
மகவொன்று பிறந்தபின்னர்
மணவாளனை தள்ளிவைத்து
சுகமெல்லாம் உதறிவிட்டு
சுமந்தாள் அன்னைனமை.
பிள்ளையொன்று பிறந்தபின்னர்
பெண்டாட்டி சுகமொதிக்கி
தொல்லையெல்லாம் பொறுத்து
தோளிலிட்டு வளர்த்தார் .
அன்றாடம் கஞ்சிதான்
அதிகபட்ச உணவானாலும்
அள்ளிநமக்கு வைத்துவிட்டு
அருகிருந்து ரசித்திருந்தார்.
நோய்வந்து படுக்கையிலே
காய்ச்சலில் துடிக்கயிலே
நாய்போல் அலைந்து
பேணிவந்தார் பெற்றோர்.
கிழவியின் முகங்களென
கீறிட்ட சாலையில்
பள்ளியில் சேர்த்து
ப
சக்கரமாய் அனுதினமும்
சுழன்றிடும் வாழ்வில்
குண்டொன்று வெடித்தால்,
வன்முறை நடந்தால்
சாமானிய மக்கள்தான்
சாவதும் அழிவதும்.
படித்தவன் படைத்த
பாதுகாப்பு கருவியாம்
துப்பாக்கி விதையில்
இரத்தம் அறுவடை.
படிப்பு பொய்யோ!
படைப்பு பொய்யோ!
விஞ்ஞானம் போற்றும்
வியத்தகு படைப்பாம்
விமானம் பொழியும்
எச்சில் குண்டால்,
வீடுகள் எல்லாம்
விதவைகள் ஆகுதே.
எத்தனை வன்முறை
எத்தனை கலவரம்
எல்லாவற்றையும் பூமியும்
நாங்களும் பொறுத்து
எதற்காக தாங்குகிறோம்?
வாழ்க்கை வாழ்வதற்கு.
L.Prasanth
நான்காம் ஆண்டு
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி, பாச
அறிவெல்லாம் கொடுப்பதற்கு
அப்பன் காட்டிய
கருவறை –வகுப்பறை.
நண்பர்களை தேடியே
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
நல்லொழுக்கம் பயில்வதற்கு
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
என்னை வழிநடத்த
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
திறமையை வளர்த்தெடுக்கும்
ஆசிரியர் இருக்கும்
கருவறை –வகுப்பறை.
கல்லாத மூடரே
இல்லாமல் மாற்றிடும்
கருவறை –வகுப்பறை.
படிப்பும் பகுத்தறிவும்
பிறர்போற்றும் புகழுந்தரும்
கருவறை –வகுப்பறை.
பழமையை போற்றியும்
புதுமையும் சேர்த்திடும்
கருவறை –வகுப்பறை.
அறிவெனும் உன்னத
இறைவன் இருக்கும்
கருவறை –வகுப்பறை.
உன்னை அறிந்திட
நீயும் செல்வாய்
கருவறை –வகுப்பறை.