gokila - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : gokila |
இடம் | : singanallur |
பிறந்த தேதி | : 22-Jan-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 415 |
புள்ளி | : 52 |
பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும்
காணாது கொள்ளும் காதல் சரியா ? தவறா ?
காதலிக்க தகுதி தேவையா ? இக்கால பெண்கள் தகுதியாய் எதை எதிர் பார்கிறார்கள் ? ஏன் ?
இன்றைய காலகட்டத்தில் காதல் காதலர் நிலை என்ன?
வேற்று சாதியினரை காதலித்தது தவறா?
சாவை காட்டி மிரட்டும் பெற்றோரை என்ன செய்வது?
சாதிக்கு பலி என் காதலா?
உண்மை
என் அன்பு தோழி
நீ என்னை விட்டுப் பிரிந்து
செல்வாய் என்று முன்பே தெரிந்திருந்தால்
நான் உன் இதயமாக பிறந்து
உன்னைக் காப்பாற்றியிருப்பேன் !
உன் உயிரை மட்டும் அல்ல!
நம் நட்பையும் கூட !
தோழி நீ என்னைவ் விட்டுப் பிரிந்து சென்றாலும்
நாம் படித்த பள்ளிக்கூடம் இன்றும் நம்
நட்பை நினைவுப்படுத்துகிறது !
நல்ல நட்பைக் கொடுத்த அந்த கடவுள்
ஏன் என் தோழிக்கு நல்ல இதயத்தைக்
கொடுக்க மறந்தாரோ !
கருவறையைக் கல்லறையாக்கிவிட்டுக்
கல்லறையை கருவிலே சுமந்தாயோ !
தாய் என்ற சொல்லை உருவாக்கிய எங்களை
வாழவிடாமல் அழிப்பது நியாயமா ?
வாழும் மனிதர்கள் உருப்படியில்லை
வாழ நினைக்கும் நாங்களோ கல்லறையில் !
தாய்ப்பால் கொடுக்க மறந்து
கள்ளிப்பால் கொடுத்தாயோ -என்னை மறைக்க
பூக்கள்கூட மலர்ந்தபின் தான் வாடும் -ஆனால்.
மனிதர்களோ தாய்மையை மறைக்கிறார்களே -ஏன் ?
நாங்கள் பிறப்பது பிடிக்கவில்லை என்றால்
நீங்கள் ஏன் பிறக்க வேண்டும் !
(...)
இதயம் என்பது ஒரு கருமேகம்
தான் அதில் நீ
வெண்ணிலவாய் வந்து சேரும் வரை!
இதயம் என்பது ஒரு பெண்
தான் அவள் கூந்தலில்
ரோஜாவாய் சூடும் வரை !
இதயம் என்பது ஒரு எழுத்து
தான் அதில் நீ
கவிதையாய் வரும் வரை!
என் இதயத்தை
கருமேகமாக !
வெண்ணிலாவாக!
அழகிய பெண்ணாக! ,
ரோஜாவாக !
எழுத்தாக !
கவிதையாக! கூட வருணிக்கிறேன்.
ஆனால் இதயமோ
என் என்னவனை
காதலிக்காதனு சொன்னா
என்னோட பேச்சைக்
கேட்காம நான் அப்படித்தா
காதலிப்பனு சொல்லுது
இதயம் என்னுடைய வார்த்தைகளை
மட்டும் அல்ல !
அன்பு கொடுக்கும் வேளையில் எவருடைய
வார்த்தைகளையும் கேட்காமல்
அளவுக்கு அதிகமான அன்புகளை
பகிர்ந்து விடும் !
மாண்புமிகு ஆசிரியர்
அகரம் சொல்லிக் கொடுத்து
ஆர்வமூட்டி
இன்பமளித்து
ஈகையைக் கற்பித்து
உள்ளம் உவந்து
ஊன்றுகோலாய்
எழுத்தாணியாக
ஏர் போல் நடந்து
ஐயம் நீக்கி
ஒற்றுமையைப் பலமாக்கி
ஓதுவது ஒழியாது
ஔவை வழி நடத்தி
அக்கம் சுருக்காமல் நிலைத்த
பல்கலைக் கழகமாம் ஆசிரியர்
எனவே ,
ஆசிரியரைப் போற்றுவோம் !
கல்வியில் உயருவோம் !
மரியாதையை கற்றுகொள்வோம் !
வாழ்வில் வளம் பெறுவோம் !
என்றும் மாண்பு மிகு மாணவனாய்!
சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
என் நிலவே வா !
என் அழகே வா !
என் உயிரே வா !
என்னுள் உறைய வா !
என் என்னவனை பார்க்கிறேன்
அதில் உன் முகம் தெரிகிறதே !
ஏன் தெரியுமா ?
என் என்னவனுக்கும் மேலாக
நான் உன்னை நேசிக்கிறேன் !