அடம்புடிக்கும் இதயம்

இதயம் என்பது ஒரு கருமேகம்
தான் அதில் நீ
வெண்ணிலவாய் வந்து சேரும் வரை!
இதயம் என்பது ஒரு பெண்
தான் அவள் கூந்தலில்
ரோஜாவாய் சூடும் வரை !
இதயம் என்பது ஒரு எழுத்து
தான் அதில் நீ
கவிதையாய் வரும் வரை!
என் இதயத்தை
கருமேகமாக !
வெண்ணிலாவாக!
அழகிய பெண்ணாக! ,
ரோஜாவாக !
எழுத்தாக !
கவிதையாக! கூட வருணிக்கிறேன்.
ஆனால் இதயமோ
என் என்னவனை
காதலிக்காதனு சொன்னா
என்னோட பேச்சைக்
கேட்காம நான் அப்படித்தா
காதலிப்பனு சொல்லுது
இதயம் என்னுடைய வார்த்தைகளை
மட்டும் அல்ல !
அன்பு கொடுக்கும் வேளையில் எவருடைய
வார்த்தைகளையும் கேட்காமல்
அளவுக்கு அதிகமான அன்புகளை
பகிர்ந்து விடும் !