வகுப்பறை
அறிவெல்லாம் கொடுப்பதற்கு
அப்பன் காட்டிய
கருவறை –வகுப்பறை.
நண்பர்களை தேடியே
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
நல்லொழுக்கம் பயில்வதற்கு
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
என்னை வழிநடத்த
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.
திறமையை வளர்த்தெடுக்கும்
ஆசிரியர் இருக்கும்
கருவறை –வகுப்பறை.
கல்லாத மூடரே
இல்லாமல் மாற்றிடும்
கருவறை –வகுப்பறை.
படிப்பும் பகுத்தறிவும்
பிறர்போற்றும் புகழுந்தரும்
கருவறை –வகுப்பறை.
பழமையை போற்றியும்
புதுமையும் சேர்த்திடும்
கருவறை –வகுப்பறை.
அறிவெனும் உன்னத
இறைவன் இருக்கும்
கருவறை –வகுப்பறை.
உன்னை அறிந்திட
நீயும் செல்வாய்
கருவறை –வகுப்பறை.
L.Prasanth
நான்காம் ஆண்டு
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி, பாச்சல்,
நாமக்கல்-637018