காற்றாய் வந்தவளே

காற்றாய் வந்தவளே
(ஒரு சிறு கற்பனை)

அவநம்பிக்கையில் நான் முழ்கி இருந்தேன்
அவ(ள்) நம்பிக்கையை என்னுள் ஊற்றி சென்றாள்

வாட(வோ) கை என்று நான் இருந்தேன் அவள் என்னை
வாடகை பெற்று சென்றாள்

புண் செய்வாளோ என்று நான் நினைத்தேன் - அவள்
புன்னகை பூத்து சென்றாள்

வாழ்க்கை போராட்டத்திற்க்கு நடுவில்
இடம் பிடிக்க தவித்தேன் - அந்த

வண்ண தேரோட்டத்திற்கு அவள்
வடம் பிடித்து சென்றாள்

முச்சு இறைக்க முயன்று விட்டேன் என்றேன்
முச்சு உள்ளவரை முயன்று பார் என்றாள்

எச்சில் இலையாய் என்னை நான் கடிந்தேன் - அவள்
செப்பு சிலையாய் என்னை வடித்தாள்

வெற்றி வேண்டும் என்று நான் சொன்னேன் - அதற்கு உன்னில்
வெறி வேண்டும் என்றாள் அவள்

வலி என்றேன் - அது
வழி என்றாள்

வாடிய போதெல்லாம்
தேடியே அவள் வந்தாள்

இன்று
வாகை பெற்று நான் வருகையில்
வாங்க கையின்றி சென்றாள்

என்றாவது வருவாள் என்று
எண்ணி நான் இருக்கையில்

அவ(ள்) நம்பிக்கையில் என்னை
ஆழ்த்தி சென்றாள்

வருவாளா?

என் ஏக்கம் கலைவாளா?

எழுதியவர் : N Thiyagarajan (16-Nov-14, 7:46 pm)
Tanglish : kaatraai vanthavale
பார்வை : 254

மேலே