அன்புசாதிக்கும்
தேசத்துக்கு தேசம்
திசைகள்...
திக்குகள் எங்கிலும்
பரவிக்கிடக்கும்
தீவிரவாதிகளே !
உங்கள்
பயணத்தின் இலக்கு
எவ்வளவுதூரத்தில் இருக்கிறது...?
எப்போது முடியப்போகிறது
உங்கள்
பேரழிவுப்பெரும் பயணம்...?
உங்கள்
தத்துவம்..
தாத்பரியம் ..
இலட்சியம்தான் என்ன ?
அழிப்பதுவும்
அழிபடுவதும் தானா
உங்கள்
சீரிய சித்தாந்தம்?
உங்களுக்கு
இன்னுமா அடங்கவில்லை
இரத்த தாகமும்
உயிர்பசியும் ?
தீவிரவாதிகளே
தீவிரவாதம் வேண்டாம் !
ஆயுதங்கள் சாதிக்காததை
அன்புசாதிக்கும்
அஹிம்சை சாதிக்கும்

