முதல் இரவுக்கு முற்றுப்புள்ளி

முதல் இரவுக்கு முற்றுப்புள்ளி!!!


கணேஷ் சொந்த டாக்ஸி வைத்து வடைகைக்கு சொந்தமாக ஒட்டி வருகிறான்...விட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் தாய் செல்லம் அதிகம் சம்பாரிக்கும் பணத்தை கரைக்டா அம்மாவிடம் கொடுத்து விடுவான்....
வீட்டு வாசலில் லிருந்து... அம்மா....அம்மா...என்று அழைத்தான்.... கணேஷ்...
என்னடா செல்லம் என்று அவனின் அம்மா மீனாட்சி....
வண்டிக்கு சின்ன ரிப்பேர் ஒரு முன்னுறு வேண்டும் என கேட்டான்....
கேட்ட படி மறு கேள்வி இல்லாமல்.....
தன முந்தானையில் முடிந்தது வைத்திருந்த முடிச்சை அவிழ்த்து....கொண்டே....நாளைக்கு பொண்ணு வீட்டு காரவங்க உன்ன பார்க்க வராத சொல்லி அனுபிருகாங்க.....நாளைக்கு எந்த வேலை எப்படி இருந்ததாலும்...அவங்க வர்ற நேரத்தில விட்டுல இருக்கனுமடா....செல்லம்....என்று கொஞ்சியவாறு ரூபாய் முனூரை கொடுத்தாள்....
சரிம்மா...ஒரு வாராமா சொல்லிக்கிட்டு தான் இருக்கே....
நாளைக்கு தானே சரி என்றவன்....
காரை எடுத்து கொண்டு வொர்க் ஷாப் போய் விட்டான்......
சுவற்றில் மாட்டி இருந்த தன் கணவன் போட்டோவை பார்த்தவாறு....கை எடுத்து கும்பிட்டு.....
நாளைக்கு வர சம்பந்தம் நல்ல படியா முடியனும்ன்னு....வேண்டி கொண்டாள்....
கணவன் இறந்து போய் இந்த பத்து வருசத்துல என்ன பாடு பட்டு இந்த ஒரு பிள்ளைய வளர்த்திருப்பா....
இன்று பசியாமல் கஞ்சி குடிக்கிறாள் என்றால் இந்த மகனால் தானே என்று பெருமிதம் அடைந்தவலாய்....தனக்குள் சந்தோசம் அடைந்தாள்....
மறு நாள் பொழுது புலர்கிறது விடிய காலையிலேயே...வாசல் தெளித்து பெரிய கோலம் போட்டு கொண்டு இருந்தாள்...மீனாட்சி....
அவ் வழியே போகிரர்வர்கள் குட நின்று என்னக்கா....இவ்வளவு பெரிய கோலத்தை போட்டுக்கிட்டு இருக்கே....
எம் புள்ளைய மாப்பிள்ளை பார்க்க வரங்க...என்று பெருமை அடித்து கொண்டாள் மீனாச்சி.....
பலகாரம் எல்லாம் செய்து முடித்தவலாய்....
கணேஷை எழுப்பி ----குளிக்க -----வைத்து சும்மா சூப்பரா உடையில் அவனை அலக்கரித்து விட்டவளாய்......
எம் புள்ளைக்கு எங்கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று அவனை தடவி திருஷ்டி களித்தாள்....
சொன்ன படி மாப்பிள்ளை பார்க்க பத்து பேர் வந்து விட்டார்கள்.......
அந்த கூட்டத்தில் ஒரு பெரியவர்....
எங்களுக்கு மாப்பிள்ளை பிடித்து விட்டது...மேற்கொண்டு ஏதாவது ..... பேசனம்னுன்ன.....செல்லுமா.... மீனாட்சி....
என்னத்தக பேச.....நான் பொம்பள புள்ள பெறாதவ..... எனக்கு இருக்கிறது...ஒரே புள்ள.... எனக்கு சொத்துன்னு...எம் புள்ளைய தான் சொலுவேன்...இருக்கிற மூனு சென்ட் எடமும் தான்...இந்த எடத்த குட அவங்க அப்பா வங்கி போட்டுட்டு போய்ட்டார்...... என்று நிறுத்தியவள்......
எம் மருமகளை... மகளா...பாத்துக்குவேன்... என்று ...தன் முந்தானையால் முகத்தை துடைத்து கொண்டாள்....
நம்ம ஊர் அம்மன் கோவில்ல கல்யாணத வச்சுக்கறலாம்.... என்று....
இரு தரப்பிலும் எல்லாம் நல்லபடி பேசி கல்யாண தேதியை குறித்தனர்....
மணமகள் சாந்தி....மாப்பிள்ளை பார்த்த நாள் முதல்லிருந்து.....கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாக தான் இருக்கிறாள்....
இதோ பாரு டீ.... பெத்தவங்க சொல்லுற மாப்பிள்ளையை கட்டிகிறது தான் எல்லா பொண்ணுகளுக்கும் அழகு.....பெத்து வளர்தோம்ல.... எங்களுக்கு தெரியாதா...??? எது நல்லது...... எது கெட்டதுன்னு..... என்று சாந்தியின் அம்மா வார்தைகளால் கடித்தாள்..
சாந்தியின் மனதில் சங்கரை நினைத்து இருந்தாள்....
சங்கர் அவள் வீட்டுக்கு பக்கத்து வீடு என்பதால் சிறு வயது முதல் பழக்கம்....இப் பழக்கம் காதலாக மாறியது.....
இதை அறிந்த சாந்தி வீட்டார் பல முறை கண்டித்தும்.....கேட்பதாக இல்லை... இருவரும்....
குறித்த கல்யாண தேதியும் நெருங்கி கொண்டு வருகிறது....
பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்...என்று அழைப்பிதழ் கொடுத்து அழைக்கவும்...இரு வீட்டார் தொடங்கி விட்டனர் ....
இடையில் ஒரு நாள் சங்கர்ரை சந்திக்க நேரிட்டது.....அந்த சந்திபிற்க்கு பிறகு.....
கல்யாணமே வேண்டாம் என்றவள்..... அமைதியனாள்....
அவளின் அமைதி எதற்கு என்பது தான் புரியாத புதிராக இருந்தது....
விடிந்தால் கல்யாணம் அந்த அம்மன் கோவில்ல.... எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கிறது...
மணக்கோலத்தில் சாந்தி....
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு என்று எல்லாம் சகிதமாக முடிந்தது....
எல்லா சடங்குகளுடன் ---மாப்பிள்ளை கணேஷ் சாந்தியின் கழுத்தில் தாலி கட்டினான்...
அன்று இரவே முதல் இரவிர்க்கான ஏற்பாடுகள் செய்ததால் அவளின் அண்ணி மல்லிகா....
கணேஷ் உள் அறையில் சாந்தின் வருகைக்காக கனவுகளுடன் காத்திருந்தான்......
எதிர் பார்த்த படி சாந்தியும் அந்த அறையில் கையில் பாலுடன். தலை நிறைய மல்லிகை பூ வைத்து கம கமக்க..... உள்ளே நுழைந்தாள்.... அவளாக கதவை தாளிட்டு கொண்டாள்...
. பாலை அவன் முன் நீட்டினால்..
பாலை ஒரு கையில் வாங்கியவன் மறு கையில் அவளை அணைக்க முற்ப்பட்டான்...அவள் விலகி போனாள்...
பாலை குடித்தவரே....அவனின் கண்கள் அவளை ஆணி அடித்தார் போல் ஒரு பார்வை....
வெட்கி தலை குனிதவவளாய்.....சாந்தி....
பாலை குடித்த சிறுது நேரத்தில்.....
கணேசுக்கு தலை சுற்றுவது போல் ஒரு மயக்கம்....அப்படியே அந்த கட்டிலில் சாய்ந்தவன் தான்....
சற்று நேரத்திற்குள் எல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்....
சங்கர் சொன்ன ஐடியா.....வெற்றி.....
அவள் மனதில் படபடப்புடன்.....அந்த அறையில்.....
வீட்டில் எல்லோரும் நல்ல அசந்த துக்கத்தில் இருக்கிறார்கள்....
அங்கும் இங்கும் செவி சாய்த்தல்.....சப்தம் ஒன்னும் இல்லை அங்கே அமைதி நிலவுகிறது....மெதுவா கதவை திறந்து வெளியே வந்தால் சங்கர் அவள் வருகைக்காகா சொன்னது போல் காத்திருந்தான் ஆட்டோவில்...
சொன்ன படி எல்லாம் சக்சஸ்...... அவள் அவனுடன் ஈஸ்கேப்......
வழக்கம் போல் விடிந்த்தது அந்த காலை பொழுது.....மல்லிகா....
சாந்தி...சாந்தி....என்று அந்த முதல் இரவு அறையை தட்டுகிறாள் மல்லிகா....
நிண்ட நேரமாகியும் கதவு திறக்காததால்....
அவளின் மனதில் ஒரு பட படப்பு இருந்து கொண்டே இருந்த்தது....
சற்று நேரம் களித்தது கணேஷ் கதவை திறந்து வெளியே வர.....
சாந்தி காணவில்லை....
அடி பாவி....என்று கன்னத்தில் கை வைத்தவளாய்....
எல்லாம் தேடி பார்தார்கள்....
அவள் எழுதி வைத்திருந்த கடிதம் அந்த அலமாரியில் இருந்தது....
அதை படித்த பிறகு தான் தெரிந்தது.....
எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது சொன்னேன்...பரிசம் போடும் போது சொன்னேன்...பத்திரிகை அடிக்கும் போது சொன்னேன்.....எனக்கு சங்கரை கல்யாணம் செய்து வைக்கும் படி யாரும் கேக்கல...ஆகவே நிங்கள் பார்த்த மாப்பிளைக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு எல்லாம் தூங்கிய பிறகு நான் சங்கருடன் சேர்த்து விட்டேன்...என்னை யாரும் தேட வேண்டாம்...என்று அவள் எழுதிய கடிதத்தை படித்தனர்...
துக்கத்தில் ஆழ்ந்த்வர்களாக நின்று இருப்பதை பார்த்த கணேஷ்.....
முதல் இரவுக்கு முற்று புள்ளி வைத்தவனாய் கணேஷ் அவனின் வீடு நோக்கி நடந்தான்....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (17-Nov-14, 11:51 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 242

மேலே