விவசாயி

21 நூறாண்டுகள்
முடிந்து விட்டன
கம்ப்யூட்டர் முதல்
ராக்கெட் வரை
அனைத்தும் வந்து விட்டன
எத்தனையோ
சாதித்தும் விட்டாய்
என்ன இருந்தாலும்
நீ வாழ்வது மட்டும்
என் தந்தை சேறு மிதித்து
தந்த சோறு தான்
மறந்து விடாதே தோழா
உன் கம்ப்யூட்டர் யோ
ராக்கெட் யோ
சோறு போடவில்லை என்று
என் தந்தை மிதித்த
சேறு தன சோறு போட்டதென்று...!