வளமான எதிர்காலம்

கொஞ்சம் விளக்கி சொல்பவராக,
கொஞ்சம் சகித்து கொள்பவராக,
கொஞ்சம் பொறுத்து கொள்பவராக,
இருப்பவர் வளமான எதிர்காலம் பெறுவர்.
எப்போது அடக்கத்தையும், அறிவையும்,
அன்பும் பெருகிறாயோ அப்போதே
வளமான எதிர்காலத்தை பெறுகிறாய்.
ஒரு முறை துண்டிக்கும் முன்
பலமுறை அளந்து பார்.
நீ மெய் கூறி வருபவனாய் இரு
எதனையும் ஞாபகம் வைக்க தேவையில்லை.
புத்தகமும், நண்பரும் குறைவாக இருந்தாலும்
சிறப்பாக வைதுக்கொள்பவனாகு.
ஒவ்வொரு வாய்ப்பிலுள்ள துன்பத்தை
பார்க்கும் சோம்பேறியாகாதே,
ஒவ்வொரு துன்பத்திலும் உள்ள வாய்ப்பை
பார்த்து வேலைசெய்பவனாகு.
அப்போதே வளமான எதிர்காலம் பெறுவாய்.
வளமான எதிர்காலம் வேண்டுமெனில்
பணத்தை குவிப்பவனாகாதே,
தேவையை குறைப்பவனாகு. தவறினால்
வாங்கும் கடனும், தேங்கும் பணமும்
வளர, வளர உன் வளமான
எதிர்காலம் உயிரின்றி காலமாகிவிடும்...............

ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பகல்லுரி
எலம்பலூர் , பெரம்பலூர்

எழுதியவர் : ப. கலியமூர்த்தி (17-Nov-14, 4:04 pm)
சேர்த்தது : Kaliyamoorthy
பார்வை : 150

மேலே