வெறும் நிலத்தினிலே வெள்ளம் வருவதில்லை

நேரம் இழக்காதே... உன் வாழ்வைத் தொலைக்காதே...

சுற்றும் உலகமிது... நீ சொன்னால் நிற்காதே...
தன் திசையை மறந்தாலே இந்த உலகம் நிலைக்காதே...

எட்டுத்திசை இருக்கு... அட உனக்கொரு திசை இல்லையா...
ஏழ்மை எழுந்தோட நீ எழுந்து நடை போடு..

எறும்புக்கூட்டம் அது கட்டும் கோட்டையடா....
தானும் சிறிதென்றோ தன் வாழ்வும் சொட்ப்பமென்றோ...
ஒரு கணம் நின்றிடுமா தன் செயலை மறந்திடுமா...

வெற்றுப்பேச்செல்லாம் வேதம் ஆகிடுமா...
வெறும் நிலத்தினிலே வெள்ளம் வருவதில்லை...
நீ தோண்டிப்பார்க்காமல் நீர் வெளியில் தெரிவதில்லை..

எழுதியவர் : (17-Nov-14, 5:00 pm)
பார்வை : 91

மேலே