தோற்றினும் முயற்சிசெய்

விழித்து எழுந்தவுடன் கிடைப்பதில்லை வெற்றி
விழுந்து எழுந்தவுடன் கிடைப்பது .
ஒவ்வொரு முறையும் வீழ்வது
மீண்டும் எழுவதற்கே.
வெற்றி பெருவதற்க்கு என்றும்,
தோல்வியை கற்றுக்கொள் தவறில்லை.
முயற்சியேனும் வலது காலை முன்னே வை
பின் வெற்றியெனும் இடது கால் தானே வரும்.
வெற்றி என்பது உன் நிழல் போல,
உன் கால்கள் வெளிச்சத்தை நோக்கினால்.
முயற்சியும், தன்னம்பிக்கையும்
நிறைந்தவனாகு காலம்
என்றும் கை தூக்கி விடும்.
இயலாமல் தோற்றவனாகு, ஆனால்
முயலாமல் தோற்றவனாகாதே.
விலகாமல் முயற்சி செய்பவனாகு,ஆனால்
முயற்சியைவிட்டு விலகி செல்பவனாகாதே.
முயற்சியில் தவறு செய்பவனாகு,ஆனால்
முயற்சி செய்ய தவறுபவனாகாதே.
உன் ஆர்வம் குறைய, குறைய
வெற்றி வெகுதுரம் செல்லும்.
உன் அடையாளம் தயக்கமானாள் தோல்வி
அதுவே, துணிச்சலானால் வெற்றி.
உன் மூச்சு நின்றால் மட்டுமல்ல
உன் முயற்சி நின்றாலும் மரணம் தான்.
வெற்றி என்றுமே முடிவடையாது
தோல்வி என்றுமே முடிவாகாது.............
ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பக்கலூரி
எலம்பலூர் , பெரம்பலூர்