உன்னை சிந்தித்தால்

உன்னை சிந்தித்து பார் நீ யார் ? என்று,
தடம் பார்த்து நடக்கும் மனிதனா ?,
தடம் பதித்து நடக்கும் மாமனிதனா ?,
வெற்றியின் போது பணிவு கொள்பவனா ?,
தோல்வியின் போது துணிவு கொள்பவனா ?,
எதையும் சிந்தித்து செயல்படுபவனா ?,
எதையும் சிறைபிடித்து கொல்பவனா ?,
வறுமை வந்தால் வாடுபவனா ?,
வசதி வந்தால் ஆடுபவனா ?,
துன்பப்படாமல் வெற்றி பெறுபவனா ?,
முயற்சித்து பெருமை அடைபவனா ?,
சிந்தனையில் தெளிவு பெற்றவனா ?,
கலங்கி நிதானமற்று செயல்படுபவனா ?,
பிறர் தவறுகளை மன்னிப்பவனா ?,
பிறர் உதவிகளை மறப்பவனா ?,
பிறரை தூக்கி விட குனிபவனா ?,
பிறரை தாழ்த்திவிட்டு நிமிர்பவனா ?,
மன அமைதிக்கு தன்குறை கலைபவனா ?,
பிறரிடம் குறை காண்பவனா ?,
விட்டு கொடுத்து வாழ்பவனா ?,
விட்டு கொடுப்பதை கெடுப்பவனா ?,
எதுவாயுனும் காரணம் சொல்பவனா ?,
எதுவாயுனும் காரியம் செய்பவனா ?,
அச்சம் விட்டு உச்சம் தொடுபவனா ?,
துணிவு விற்று துக்கம் வாங்குபவனா ?,
பேசும் முன் கேள்விகேட்பவனா ?,
எழுதும் முன் சிந்திப்பவனா ?,
செலவழிக்கும் முன் சம்பாதிப்பவனா ?,
நீ யார் ?,என்று சிந்தித்து நல்வழியில்
சென்றுப்பார் வாழ்க்கை உன் வசமாகும்................

ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பக்கலூரி
எலம்பலூர் , பெரம்பலூர்

எழுதியவர் : ப.கலியமூர்த்தி (17-Nov-14, 8:06 pm)
சேர்த்தது : Kaliyamoorthy
பார்வை : 155

மேலே