தூத்தல் - கே-எஸ்-கலை

பத்தடி தொலைவில்
வெடித்துச் சிதறியது குண்டு
சலனப்படவில்லை புத்தன் !
===
ஆட்சிக்காலம் முடிய
முடிச் சூடக் காத்திருக்கிறது
இன்னொரு சிங்கம் !
===
சுடுகாட்டுப் பக்கம்
ஓநாய் கவ்விப் போகிறது
வெட்டியானின் கை !
===
ஓடிவிட்டார்கள் யாவரும்
மேய்ந்துக் கொண்டிருக்கிறது
நொண்டி ஆடு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (18-Nov-14, 1:35 am)
பார்வை : 199

மேலே