அலங்கார பொம்மை

பெண்ணுக்கு
அழகு பொன்
அல்ல புன்னகை....

அவள் உடலுக்கு
அழகு பட்டாடை
அல்ல கட்டும் ஆடை..

பெண்ணுக்கு
தேவை உருக்கிய
தங்கம் இல்லை
ஒன்றாக வாழும்
நெஞ்சம்..................

நிலைக்கப்
போவது பகட்டு
வாழ்க்கை இல்லை
பண்பான வாழ்வு...

அள்ளிக் கொடுக்கும்
பொன்னுக்குள்
இல்லை அணைத்துக்
கொடுக்கும் முத்ததில்
தான் உள்ளது அன்பு....

பணத்துக்கு நாம்
பாதுகாவலனாக
இருக்கும் வரை
உள்ளத்தில் அமைதி
பணம் நம்மை மேய்க்க
ஆரம்பித்தால் விழிக்கு
உறக்கம் பகை..........

கண் கவரும்
வண்ணம் தங்கம்
மாட்டி வெளி அழகு
காட்டி உள் அங்கம்
குறை கண்ட பின்
கூடி வாழ்வானோ
கை பிடித்த மன்னன்...

பல விதமான
நகையில் எத்தனை
பனியாளர்களின்
வியர்வை துளியுடன்
கண்ணீர் துளியும்
தங்கி உள்ளதோ....

முக்கியமான
மூன்று முடிச்சி
தாலி போட
முளுமையான
இடம் இல்லை
கழுத்தில்..............

முதுமை வரை
வாழப்போகும்
கனவனுக்கு
தாலி போட இடம்
இல்லாமலே தடை
போட்டாள் தங்கத்தால்
இந்த மங்கை............

பொன்னுக்காகப்
போனானோ இல்லை
பொண்ணுக்காகப்
போனானோ உலகுக்கே
அவன் ஒரு கையாளா
ஆண் மகன்என்று
குத்தி விட்டாள்
உச்சிமேல் பச்சை....

பணத்துக்காக
படுக்கை அறை
வரை போன
மாப்பிள்ளை
கடுப்பாகாத வரை
கிடைக்கும் மரியாதை...=

இவள் அள்ளி
வீசும் புன்னகையும்
கொள்ளி வைத்தால்
போல் அள்ளி மாட்டிய
தங்கம் விழுங்கியதால்
மங்கிய போனது
பார்ப்போர் கண்ணில்
தங்கியது தங்கமே.....

பலர் இழுத்து விடும்
பெரும் மூச்சு இவளை
தாக்காமல் இறுதி மூச்சி
வரை இல்லறம் சிறக்க
இறைவந்தான் காக்க
வேண்டும் இவர்களை...

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (18-Nov-14, 8:23 pm)
Tanglish : alangaara pommai
பார்வை : 110

மேலே