நவீன தருமிகள்

ஏழ்மை வறுமையினால்
மண்டபத்தில் கவிதை பெற்று
நக்கீரன் நாவிழுந்த
தருமியைக் கண்டு இரங்கிடுவோம்..
திருவிளையாடல் எனக்கொண்டு!

கற்பனை வறட்சியினால்
இணையத்தில் கவிதை எடுத்து
தன் வலைப்பூவில்
செருகி வைக்கும்
நவீன தருமிகளை என் செய்வோம்..?

நக்கீரன் கூட
தேவையில்லை இதற்கு..
குற்றஉணர்வு எனும்
நெற்றிக்கண் சுட்டெரிக்கும்
இத்தகைய தருமிகளை!

எழுதியவர் : கருணா (19-Nov-14, 3:58 pm)
பார்வை : 149

மேலே