வலி இருக்கிறது , வழி தெரியவில்லை

=====================================
வலி இருக்கிறது , வழி தெரியவில்லை
====================================
நிற்காமல் பயணித்தேன்
நடக்காமல் தேடினேன்
உதட்டில் கூட வேர்த்தது
கண்கள் கூட காய்ந்தது
வழி தெரியவில்லை
வலி கொண்ட கால்களுக்கு ,
ஆடாத தொட்டிலில்
அசைந்து படுத்தேன்
கிடைக்காதது அனைத்தும்
கிடைத்தது கனவில் ,
என்ன தேடினேன்
எது கிடைக்கவில்லை ,
ஐநூறு மையில் தொலைவில்
தாயை தேடினேன்
எட்டு அடுக்கு மாடியில்
வேலை தேடினேன்
தோள் அணைப்பில்
தோழனை தேடினேன்
பட்டாம் பூச்சியாக
காதலியை தேடினேன் ,
மலை நடுவே
இல்லம் தேடினேன்
ஏழை இல்லாத
உலகம் தேடினேன்
மண்ணில் பிறந்த என்னை
என்னை எனக்குள்
தேடினேன் ,
கல்லாய் மட்டும் இருக்கிற
கடவுளை தேடினேன்,
உலகை படைத்த சக்தியே
வலி தான் கொடுத்தாய்
வழியாவது காட்டியிருக்கலாமே !!!!!!!!