எது அழகு

மேக்கப் போட்டு
தலைமுடியை விரித்து
இறுக்கி உடை அணிந்து
பாதையில் வலம் வரும்
பெண் அழகா ?

மஞ்சள் போட்டு குளித்து
சடைமுடி பின்னி
அழகாய் புடவை அணிந்து
நிலம் பார்த்து நடக்கும்
பெண் அழகா ?

எது அழகு !!!

அர்த்தம் புரியா பாடல் பாடி
சங்கீதம் என்ற பெயரில்
எதோ ஒன்றை இசைத்து
தலைக்கால் தெரியாமல் ஆடும்
பெண் அழகா ?

ஸ்வரங்கள் பல பாடி
இதயங்கள் குளிரும் படி
சங்கீதம் இசைத்து
நளின நடனம் ஆடும்
பெண் அழகா?

எது அழகு !!!

நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகத்தை முத்திரை
குத்திக் கொண்டு தலைக்கனம்
கொண்டு நடக்கும்
பெண் அழகா ?

கலாச்சார ஒழுக்கத்தை
கச்சிதமாய் கடை பிடித்து
முன்னுதாரணமாய் நடக்கும்
பெண் அழகா ?

எது அழகு !!!

எழுதியவர் : fasrina (19-Nov-14, 2:31 pm)
Tanglish : ethu alagu
பார்வை : 595

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே