வாலிபன்

============
வாலிபன்
============
சிலர் ஏற்பதை நான் வெறுக்கிறேன்
சிலர் வெறுப்பதை அதிகமாக நேசிக்கிறேன்
துன்பத்தை விரும்பி சுமக்கிறேன்
தோல்வியை கட்டி அணைக்கிறேன்,
என் ஆசையை தேடி போனதில்லை
என் விருப்பங்கள் என்னை
தேடி வந்ததில்லை ,
இம்மண்ணில் வாழ்வதற்காக
அடியெடுத்து வைத்ததைவிட
சாதிப்பதற்காக அடியெடுத்து
வைத்தது தான் அதிகம்,
தனி ராட்டினமாக
வெறும் ராட்டினமாக சுற்றியதால்
தோள் கொடுக்க
யாரும் வரவில்லை ,
மன கல்லறை
வலித்து வலித்து
புற்களும் முற்களும் முளைத்து
மண்டிகிடகின்றன,
அமில மலையில் நனைந்தாலும்
அனுபவத்தில் வளர்ந்து கொண்டிருகின்றேன்
ஏதோ ஒரு மூலையில் குறிஞ்சி பூவாக
பூத்து கொண்டிருக்கிறேன் ,
கிளையில் இருக்கும் பூவைவிட
கீழே கிடக்கும் பூவை
அதிகம் நேசிக்கிறேன் - எனென்றால்
நானும் கீழே கிடக்கிறேன் ,
கீழே கிடக்கும் கல்லென்று
ஏறி செல்கின்றனர்
செதுக்கப்பட்டு சிலையானால்
வரிசையில் நிற்பர் கை கூப்பி ........