என்னவன் என் உயிர் -கயல்விழி
விழிநீர் வழிகின்ற
போதிலே
விரல்கொண்டுதுடைத்திடும்
கரங்கள்
" என்னவன் "
துயர்கொண்டு துடிக்கின்ற
போதிலே
துணையாக நின்று தோள்சாய
இடம்கொடுக்கும் ஓர் உறவு
"என்னவன் "
என் சிரிப்புகள்
சிணுங்கல்கள்
கொஞ்சல்கள் கெஞ்சல்கள்
அனைத்தையும் சேமிக்கும் அன்பு பெட்டகம்
"என்னவன் "
திட்டினாலும் கொண்டினாலும்
வெட்டினாலும் வெறுத்தாலும்
மீண்டும் என்னோடு ஒட்டிக்கொள்ளும்
இன்னோர் உயிர்
"என்னவன்"