வித்தியாசம்

வித்தியாசம்


வாசற்ப்படியை மிதிக்கும் போதே,

''வணக்கம், வாங்க"

கூண்டுக்கிளி கீச்சிட்டது வராண்டாவில்;

இனிய உபசரிப்பை எதிர்பார்த்து உள்ளே போனால்[?]

அப்பாவோ செல்பேசியில்;

அம்மாவோ சின்னத்திரை சிரீயலில்;

மகனோ மடிக்கணினியில்;

மகளோ செல்லப்பிராணியின் அரவணைப்பில்;

எல்லோருமே மும்முரமாய்.........

ஓரமாய்ப் படுத்திருந்த

கண் தெரியாத பாட்டி மட்டும் வரவேற்றாள்;

"வணக்கம்,வாங்க" சன்னமான குரலில்.


ஒரே ஒரு வித்தியாசம்.........

வெளியே , பழக்கப்பட்ட கிளி ;

உள்ளேயோ , கிழிக்கப்பட்ட பழக்கம் .

" வல்ல நாடன் " இல . கணேசன் .

செல்பேசி 9443533306

எழுதியவர் : (21-Nov-14, 3:18 pm)
பார்வை : 86

மேலே