ஒரு வீடு வாங்கனும்

ஒரு வீடு வாங்கனும்!!!

சரியான நெரிச்சல் நிறைந்த பகுதி எப்ப பார்த்தாலும் வாகனங்களின் ஹாரன் சத்தமும்....தூசியும் நிறைந்து தான் காணப்படும்...அந்த தெருவில் குடி வந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது...
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று இடையிடையே சொல்லி கொண்டுருந்த கனகா...தற்போது தினமும் இதை சொல்லியே ஒரு போராட்டமாய் போராட தொடக்கி விட்டாள்.. தன் கணவனிடம்
அசோக் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான்....இவர்களுக்கு சர்மா ஒரு வயது குழந்தையும் இருக்கிறான்...சர்மா ஓடியாடி விளையாடுவதற்க்கு கூட ஒரு ஜான் இடம் இல்லை....
ஒரு பெட்ரூமும் ஒரு ஹாலும் ஒரு கிச்சனும்..உள்ள அந்த வீட்டுக்கு மாதம் வாடகை  ரூபாய்...கரன்ட் பில் தனியா கொடுக்கணும்....இதை எல்லாம் சுட்டி காட்டி எப்படியாவது ஒரு வீடு வாகனும்ன்னு பிடிவாதமாக இருக்கிறாள் கனகா...
அசோக் இப்ப வேண்டாம்..பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தான்...அவள் கேட்பதாக இல்லை....
கிராமத்தில் உள்ள வீட்டை விற்று வாங்கும்படி நச்சரிகிறாள் கனகா...
அவளின் கடைசி முடிவு இது தான்....
சரி வர லீவுக்கு ஊருக்கு போய் அப்பா விடம் பேசி பார்க்கலாம் அது வரை நீ சும்மா இரு கனகா..என்று தன் மனைவியை நோக்கி எச்சரித்தான் அசோக்....
சரியான சிட்டி என்பதால் கொஞ்சம் நெரிசலான பகுதி தான் இவள் சொல்வது சரியாக தான் தோன்றுகிறது அசோக்குக்கு....பேங்கில் லோன் போட்டு வாங்க முடியாத நிலை வேறு இதை எல்லாம் சிந்தித்தவன்....இது பற்றி அப்பாவிடம் பேசி விட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தான் அசோக்...
இருத்தாலும் கனகா அவ்வபோது தன் கணவனிடம் இது பற்றி நியாபக படுத்தி கொண்டு தான் இருப்பாள்...
திடிரென்று ஒரு நாள் அசோக் பத்து நாள் லீவு எடுத்து கொண்டு தன் சொந்த கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டான்.
இது பற்றி கனகாவிடமும் சொல்லி தயாராகும் படி சொன்னான்...
இதை கேட்ட கனகா தன் கணவனிடம் ஒரு முறை நியாபக படுத்தினால்...எது எப்படி இருத்தாலும் சரி நீங்க உங்க அப்பாவிடம் நாசுக்க பேசி கிராமத்துல உள்ள எடத்த வித்துட்டு இந்த சிட்டிலே ஒரு வீடு வாங்கிடனும்...நான் எதுவும் உங்க அப்பா விடம் பேச மாட்டேன்....என்று தன் மனதி உள்ளதை ஒரு முறை அசோக்கிடம் சொல்லி முடித்தாள் கனகா...
அதில் காலை பஸ்சில் சென்றால் தான் அன்று இரவு அவன் கிராமத்திற்கு போய் சேரமுடியும்...
அதன் படி .அந்த காலை நேரம்விடிந்தும் விடியதுமாய் இருக்கும் போதே...முவரும் புறப்பட்டு சென்றனர்...
சர்மா சரியான் தூக்க கலக்கத்தில் இருக்கிறான்...அவனையும் கனகா தன் தோளில் சாய்த்து கொண்டு பஸ்சில் ஏறி அமர்த்தனர்....பஸ்சில் ஏறி அமர்ந்து சில வினாடிகளில் சர்மாவின் காலை கடமை ..கக்கா
போய்விட்டான்..அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த ஒரு டீ கடையில் கொஞ்சம் தண்ணி வாங்கி கால் கழுவிவிட்டு மீண்டும் அந்த பஸ்சில் ஏறி அம்ர்த்தனர்...
பஸ் அந்த கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது....போகும் வழிலேயே கனகா திரும்ப திரும்ப சொல்லி கொண்டே வருகிறாள்...எப்பாடியவது உங்க அப்பாவிடம் பேசி கிராமத்து வீட்டை வித்து சிட்டில வீடு வாங்கிடனும்...
எல்லா வற்றிக்கும் சரி சரி என்று தலைய ஆட்டியவாறு....பலவாறு யோசித்தவனாய்.....அவளுடன் அவன் பஸ்சில்....
அந்த கிராமத்தை அந்த பஸ் அன்று இரவு பத்து மணிக்கு போய் சேர்த்தது....பஸ்சை விட்டு இறக்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தான் இருள் சூழ்ந்த அந்த பகுதியில் மெல்ல நடந்து வீட்டை அடைந்தான் அசோக்...
அவனின் அப்பா ராமநாதன் வாசலில் கயத்து கட்டிலில் படுத்திருந்தார்....
அப்பா....அப்பா...என்று குரல் கொடுத்து அப்பாவை எழுப்பினான்...நல்ல தூக்கத்தில் இருந்த ராமநாதன் கண்களை கசக்கியவராய்....
யாரு அசோக்காஎன்னடா சொல்லாம கொல்லாம்...இந்த நேரத்துல...என்றவாறு
உள்ளே படுத்திருந்த தன் மனைவி கண்ணம்மாவை குரல் கொடுத்தார்....
ஏன்ங்க...என்று குரல் கொடுத்து கொண்டே உள் இருந்து வெளியே வந்தாள் கண்ணம்மா...
அசோக்....கனகா....வாங்க....வாங்க.... என்று கூரியவாரு கை குழந்தை சர்மாவை வாங்கி....இரு கன்னத்திலும் முத்தம் கொடுத்தவலாய்....வீட்டினுள் அழைத்து சென்றாள்....
அம்மா பசிக்குதுமா எதாவது வச்சிருந்தத கொடுமா என்றான் அசோக்....
இருந்த பழைய சோத்தை பிழிந்தது போட்டு இருவருக்கும் கொடுத்தாள் கண்ணம்மா....
இந்த மாறி சாப்பிட்டு எத்தன வருஷம் ஆச்சு என்று சொல்லி கொண்டே அம்மா கொடுத்த அந்த பழைய சாதத்தை கூட ருசிச்சு சாபிட்டான் அசோக்....
பயண அசதியில் நல்ல தூக்கத்தையும் போட்டனர் இருவரும்....
விடிந்து விடியாததுமாய் கனகாவின் முனு முனுப்பு....
நீங்க தான் அப்பாவிடம் பக்குவமாய் பேசனும்....என்று மிண்டும் சொல்லி கொண்டாள் கனகா...
நன்றாக விடிந்த பிறகு எழுந்து வாசலில் நின்ற அசோக்...அந்த தெருவையே சுற்றி வளைத்து பார்த்தான்...
இந்த தெருவில் ஓடியாடி விளையாடியது...பழைய நினைவுகள் அவன் கண் முன் பிரதி பலித்தது.....
வழக்கம் போல் ராமநாதன் தோட்டத்து கிணத்தில் குளிக்க போய்விட்டார்....
அம்மாவிடம் அப்பாவை எங்கேஎன்று கேட்டான்...
குளிக்க போய் இருப்பதாக சொன்னாள் கண்ணம்மா....
சரிம்மா...நானும் தோட்டத்து கிணத்துல குளிச்சு ரொம்ப நாளாச்சு நானும் குளிச்சிட்டு வந்துடுரன்னு.....சொலிவிட்டு....
கனகா அந்த டவல எடு என்று தன் மனவி இடம் கேட்டான்....
டவலோடு வந்தவள் கண் ஜாடையில் அப்பாவிடம் கேளுங்கள்..என்று கண்ணை காண்பித்தாள் கனகா...
தோட்டத்து கிணத்தை நோக்கி நடந்தான் அசோக்....
ராமநாதன் குளித்து விட்டு தலையை துவட்டிய வாறு நின்று கொண்டுருத்தார்....
இது தான் சரியான நேரம் அப்பாவிடம் இப்ப கேட்டு விடலாம் என்று ஆரம்பிக்கும் போது....
இந்த கிணறு எங்க தாதா காட்டிவிட்டு போனது...காலம் காலமா நாலு தலமுறை கட்டி கத்து கிட்டு வந்துகிட்டு இருக்கோம்...நீ தாப்பா அச்சாவது தலை முறை நீயும் அனுபச்சு உம பேரனும் அனுபவிக்கனும்.....காலம்....காலமா நம்ம வாரிசுகள் தான் இத அனுபவிக்கனும்....என்று அவர் சொல்வதை கேட்கும் போது....
அவன் சொல்லவந்ததை விழுகி கொண்டான்....
குளித்து விட்டு வீடு திரும்பிய இருவருக்கும் வீட்டில் இட்லி ரெடியாக இருந்தது....
இருவரும் இட்லி சாப்பிட துடங்கும் போதே...
கனகாவின் கண்கள் மிண்டும் பேச தொடங்கியது.. அசோக்கிடம்
அன்று மாலை தன் மருமகள் கனகாவை அழைத்து கொண்டு தோட்டம் எல்லாம் சுத்தி காண்பிக்க அழைத்து சென்ற ராமநாதன்....
நமக்கு இருக்கிறது நாலு ஏக்கரும்மா....இது நம்ம வாழை தோட்டம்இது காய்கறிகள் விதைக்க தனியா ஒரு ஏக்கர் ஒதுக்கி விட்டுடேன்...கொஞ்ச துராம் தள்ளி ஒதுக்கு புரத்தை காண்பித்து இந்த இடம் எங்க தாதாபாட்டி.நம்ம வாரிசுஎல்லாம் இங்க தான் அடக்கம் பண்ணிருக்கோம்....நானும் செத்த இங்க தாம்மா அடக்கணும் என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டி காட்டினார் ராமநாதன்...
ஒவ்வொன்றாக பார்த்து ரசித்த கனகா அங்கு விசிய சுகமான காற்று பயிர்கள் அங்கு வீசும் காற்றுக்கு ஒன்றோடு ஒன்று அசந்து ஆடுவது அந்த மண்ணில் வீசும் ஒரு கிராமத்து மனம்....அங்கு வாழும் மக்களின் தூய்மையான குணம் இவற்றை எல்லாம் பார்க்கும் போது சிட்டியை விட கிராமத்தில் கிடைக்கும் பலன்களும் பயன்களும் மிகவும் பிடித்தமாகவே இருந்தது இவளுக்கு....
வீடு திரும்பியவள் தன் கணவனை நோக்கி வீடு விக்கவும் வேண்டாம்...வாங்கவும் வேண்டாம் என்று அசோக்கிடம் தீர்மானமாய் சொல்லிவிட்டாள் கனகா...

முற்றும்.

A.Mansoor Ali.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Nov-14, 12:40 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 158

மேலே