அரசாங்க கொலை
அரசாங்க கொலை!!!
அந்த காலை நேரம் கதிரவனும் தன் முகத்தை காட்டாமல்...மேகங்களுடம் ஒளிந்து கொண்டு இருக்கிறான்...லேசான குளிர் காற்று மழையும் விட்டு விட்டு தன் முகத்தை காட்டிகொண்டு இருக்கிறது.... ரோட்டில் சேரும் சகதியும்...வழக்கம் போல் வரும் பால் காரனையும் அன்று காணவில்லை.... அன்று தான் இப்படி ஒரு சம்மவம்....
அந்த ஊரையே அந்த கலக்கு கலக்கியது இந்த சம்பவம் அய்யோ.....பாவம் என வாய்மேல் கை வைத்து வருத்தபடாத மனுச இல்ல....
ஏம்மா கானகாத்தால அங்க போவனும்.
சாவு தான் இஸ்துக்குனு புட்சா..
இப்படி ஆம்புளைய வுட்டுட்டு புட்டாளே..
இன்னா அழகா இருக்கு கொழந்த.
கொழந்தைக்கு நாலு வயசு கூட நல்ல முடியலே....
நாலு பேர் நாலு விதமாக துக்கத்தை தான் வெளிபடுத்த முடிந்ததே தவிர வேறென்ன செய்ய முடியும்...
புள்ள பெத்தவள போட்டமாரி ஆத்தாளையும் பொண்ணையும் போட்டு வச்சுக்குதே...
இப்படி ஆளுக்கு ஒருவராய் புலம்பி கொண்டு இருந்தனர்... அந்த மழையிலையும் குடை பிடித்து கொண்டு பாதி பேர்...குடை பிடிக்காமல் மீதி பேர்...
ஆடி அசைந்து கொண்டு வந்த போலிஸ் அங்கு கூடி இருந்த கூட்டத்தை விலக்கி கொண்டு....பந்தா காண்பித்தவாறு நின்று கொண்டு இருந்தது...
பொது மக்களை விசாரித்தவாறு.... சம்பவம் நடந்த வீட்டையும் அடைந்தது...
அந்த மதில் சுவற்றில் தலைய முற்று கொடுத்தது போல் கதறி...கதறி...அழுகிறான் சுந்தர்.
உறவு என்ற முறையில் நாலு பேர் ஆறுதல் சொன்னார்கள்.அக்கம் பக்கம் நண்பர்கள்..எல்லாம் ஆறுதல் சொல்லி என்ன செய்ய.... யாரால் தான் ஜீரணிக்க முடியும்..
போலீஸ் விசாரணை கேக்கறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்.
பேரு,…ஊரு,…வேலைன்னு... கேள்விகளை ஆரம்பித்தது அந்த காக்கி சட்டை.. ஏதோ போன உயிரை திருப்பி கொடுப்பது போல் அவர்களின் விசாரணை...
போலீஸின் விசாரணையே தற்கொலையா???என்ற நோட்டத்தில் தான் விசாரனை ஆரம்பத்தில் அமைந்திருந்தது... .
கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகுதுங்க.....முகத்த துடைத்து கொண்டவனாய்...
ஒரு பெண் குழந்தைதாங்க....நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா தான் இருந்தோங்க....
காலையிலேயே மழை பெய்தது...போகதேன்னு சொன்னே....கேக்காம போனா....குழந்தயும் அம்மாவை புடிச்சிட்டு அழுதா அவளையும் தூக்கிகிட்டு போனா...
எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லங்க.... சந்தோஷமா தான் வாழ்க்கை நடத்திட்டு இருக்கோம்... நான் ஒரு துணி கடையில வேலை செய்ரேங்க...
காலையில பால் வாங்கிட்டு வரேன்னு புள்ளைய தூக்கிட்டு போனவதாங்க....கொஞ்ச நேரத்துல பக்கத்து வீட்டு பையன் அலறியடுச்சுட்டு ஓடியாந்தா...
என்னடான்னே...
அக்கா ரோட்டுல விழுந்து செத்து போச்சுன்னு....
துக்கம் தொண்டையை முட்டியது....கண்களில் கண்ணிர் சிந்தியவனின் முகம் சிவந்து... காணப்பட்டது....
வார்த்தைகள் தடுமாறி...தலையில் கைவத்தவனாய்...முச்சு இறைக்க தடுமாறினான் சுந்தர்...
அதுக்கு மேல அவனால பேச முடியவில்லை....
இதை தொடர்ந்த அடுத்த வீடு லட்சுமி அம்மா..
அவ ரோட்டுல ஓரமாதாங்க வந்துட்டுருந்தா ...தெரு போஸ்ட் கம்பத்தில இருந்து கரண்ட் கம்பி ஒரு செக்கண்டுல அறுந்து இவ மேல விழுந்திடுச்சு அந்த நொடிலேயே துடியா துடிச்சு விழுந்தவதா...அப்புறம் மூச்சு பேச்சு ஒன்னும் இல்ல...
இது ஒரு கொல...இதுக்கு காரணம் யாருன்னுன் கேக்கிரிங்களா?...
அவங்களை உங்காளால் ஒன்னுமே செய்ய முடியாது...
விசாரணை போலிஸ் ஆச்சரியத்துடன் நோக்கினார்.!!!
கூடி இருந்தவர்களின் பார்வைகள் அத்தனையும் லட்சுமி அம்மாவின் பக்கம் திரும்பியது...
அவர்களின் செவி லட்சுமி அம்மாவின் பக்கம் சாய்ந்தது...
நம்ம அரசாங்கம் தான்....
இத கேட்ட அத்தன பேருக்கும் வியப்பாக தான் இருந்தது...
என்னம்மா சொல்லுரீங்க....போலீஸின் வினா வியப்புடன் எழுந்தது...
புருவங்கள் உயர அவள் சொல்லவதை கேட்க தொடக்கினார்...அந்த காக்கி சட்டைகள்... அவர்களின் கண்களும் காதுகளும் லட்சுமி அம்மாவை நோக்கி இருந்தது.
ம்....கேட்டு தான் என்ன செய்ய போரிங்க....இருந்தாலும் சொல்லுறேன்...
தமிழ் நாடு மின்சார வாரியம்....கவன குறைவால ஏற்பட்ட இந்த மரணம் என்ன பொறுத்தவர இது ஒரு அரசு கொலைன்னுதா சொல்லுவேன்.
இந்த பகுதில உள்ள எத்தன மின் கம்பகளில்ருந்து மின்கம்பிகள் தொங்கிகிட்டு இருக்கு..நடந்து போனா தலைய தட்டுது....இத பத்தி எத்தன முறை மின் வாரியத்திற்கு ரிபோர்ட் அனுப்பிருக்கோம்...
எந்த அதிகாரியாவது வந்து பார்திருப்பர்களா....பொது மக்கள் பாதிச்சா அவங்களுக்கு என்ன???...
ஒரு முறை நானே நேரடியா ரிபோர்ட் கொடுக்க போனா...அந்த மின்சார வாரியம் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா? விழும் போது எங்க ஆளுங்க ஓடி வந்து புடுச்சுடுவாங்க.....என்று ஏளனம் பேசுறாரு....
இப்படி பொறுப்பில்லாத அதிகாரிகளால் ஏற்படும் விபத்தினால எத்தன குடும்பம் சீர் அழுச்சிருக்கு....
போன மாசம் கூட சைகிள்ல போன ஒரு பையன் மேல விழுந்து....தப்பிச்சோம் பிலச்சொம்ன்னு....ஓடிட்டான்....
அந்த கூட்டதில் உள்ள ஒரு பெரியவரை சுட்டிக்காட்டி....ஆறு மாசத்திற்கு முன்னால வெயில் தங்க முடியாம குடை பிடிச்சு போன இந்த பெரியவர் குடை லேசா அந்த கரண்ட் கம்பி மேல உரசி தூக்கி போட்டுடுச்சு...அதுல ஒரு கை விலங்காம போனது தான்... ஆஸ்பத்திரி,நாட்டு வைத்தியம்னு பார்த்து ஒரு புண்ணியமும் இல்ல. பிள்ளைங்கள ரோட்டுல விளையாடுனுமுன்னா கூட எங்க பிள்ளைங்கள அனுமதிக்க மாட்டோம்.... இது தான் எங்க விதி...எந்த நேரத்துல யாரு சாவான்னு தெரியாது...
கரண்டு பில் கட்டலன்னா கரண்ட கட் பண்ண தயக்க மாட்டாங்க..அதுல பொறுப்பா இருக்குற அதிகாரிகள். இதல ஏன் மெத்தனத்த காட்டுராங்க....
என்று துக்கம் பொங்க சொல்லி நிறுத்தினால் லட்சுமி அம்மா.
பொறுமையா கேட்டு கொண்ட்ருந்த அந்த காக்கி சட்டைகள்...
சுற்றும் முற்றும் பார்த்த விசாரணை போலிசால் பதில் ஏதும் சொல்ல முடியாமல் பாடியை போஸ்ட் மார்டம் செய்ய ஏற்பாடு செய்து விட்டு....
கதறி அழுது கொண்டு இருந்த சுந்தரை தட்டி கொடுக்க தான் அந்த காக்கி சட்டைகளால் முடிந்ததே தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை...
பாவம் என்று பரிதாப பட்டவர்களும் அதைத்தான் செய்தார்கள்...

