அழிந்த காதல் இழந்த தேகம்

♡♡♡
காதல் எனும் பெயரில்
கலங்கும் கலாச்சாரம் இது
இச்சைக்குள்ளாகி
இழிவாகி போனதேனோ?
♡
கயமக் காதலனவன்
வெருத்த காதலினால்
ரசாயனமதை வீசலாமோ?
♡
கசங்கி ஒடுங்கிய தேகம்
தனை காணும் பொழுது
கயமக் காதலன்
பேரின்பம் கொள்வானோ?
♡
இன்ப தருணத்தில் மலர்ந்த
பூமுகம் வெந்ததே!
ரசாயன கலவையது
தேகம் தனில் படர்ந்ததால்!
♡
உண்மை காதல் இதை
கூற வரும் வேளையில்
உன் கூரிய வாள்
எனை கொய்யலாமோ?
♡
அந்தோ! தொலைந்ததே
என் காதல் நினைவது!
இனி என்செய்வேன்?
காதலனவன் கயவன் ஆனானே!......