வேண்டும் எனக்கோர் உண்மை காதல் -கயல்விழி

ஒளிவு மறைவு தனில்
உயிர் வாழும் உன்னத
காதல் தனை உலகில் நான்
கண்டதில்லை.!

என்னவனே நீ
மட்டும்
உண்மைகளை
மறைத்து ஊமையாய்
நடிப்பதென்ன .?

உயிரிலும் மேலாக
உன்னை நான் நினைக்கையில்
உண்மைகளை என்னிடம்
மறைப்பதென்ன ?

கண்விழிக்கும் நேரம்தொட்டு
கண்ணுறங்கும் நேரம் வரை
காதல் மழை பொழிகின்றாய்

பாசம் என்னும் பெயரில்
வேஷம் காட்டி நடிகின்றாய்

என்ன செய்தேன் நானுனக்கு
ஏன் இந்த மோசங்கள் .?

வலிகள் தாங்கிட முடியவில்லை
வார்த்தையில் வடிக்க தெரியவில்லை

உண்மையாய் நீ என்னை
நேசிப்பதென்றால்
உள்ளம் திறந்து என்னை போல்
உளறிவிடு உண்மைகளை ...!

எழுதியவர் : கயல்விழி (23-Nov-14, 6:18 pm)
பார்வை : 418

மேலே