என்னை தொடருங்கள்

என்னை தொடருங்கள்!
இங்கு ஒரு சிறு கதையின் கரு எழுதி உள்ளேன்..இக் கதை கற்பனை கருத்துகள் மட்டும் நிறைந்து இருக்க வேண்டும்..என்னை தொடர்ந்து எழுதி வாருங்கள்...இதில் இன்னும் ஆறு கேரேக்டர் சேர்த்து கொள்ளலாம்...முடிவு யாருக்கும் பாதகமாக இருக்க கூடாது..சாதகமாக இருக்க வேண்டும்..
நாற்பத்தைந்து வயதை கடந்து கொண்டு இருக்கும் பரந்தாமன்..அவரின் மனைவி கமலா நல்ல லட்சனமான குடும்ப பெண்...இருபது ஆண்டுகளுக்கு முன் கமலாவை கரம் பிடித்தார் பரத்தாமன்... இல் வாழ்கையில் சுகமும் சந்தோசமும் நிறைந்த குடும்பமாக தான் இருந்தது...இவர்களுக்கும் ராமன் 15 வயது...ராதிகா 13வயது பருவம் அடைந்த ராதிகா பள்ளி படிப்பில் முதல் மாணவி என்று பெயர் பெற்றவள்.. பரந்தாமன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார் .குடும்பத்தை நல்ல படி எடுத்து செல்கிறார்... கணவனுக்கு ஏத்த மனைவி...கமலா.... இந்நிலையில் பரந்தாமனை காதலிப்பதாக ஒருவள் அவனின் வாழ்கையில் குறுக்கிடுகிறாள்...உங்கள் நினைவில வாழ்ந்து கொண்டு இருபதாக காம வார்த்தைகளில் வர்ணிக்கிறாள்.
எத்தனையே எடுத்து சொல்லியும் அவளின் பிடிவாதம் பரத்தமனை அடைந்தே திருவேன் என்ற பேர்கொடி அவளின் மனதில்..