மனித ரூபத்தில் ஓர் மிருகம்

மனித ரூபத்தில் ஓர் மிருகம்!!!

என்பத்தி நாலு வயது ஆனா அம்அம்மா ரமணி ஒரு காலத்தில் நர்சாக பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்று வீட்டில் அமர்த்து விட்டார்...எட்டு பிள்ளைகள் பெற்ற மகராசி....நாலு பெண் நாலு ஆண் என்று சமமாக பெற்ற அன்னை எட்டு பிள்ளைகளும் ஆளுக்கொரு திசையாய் பறந்து விட்டது... கடை குட்டி ஜெயாவிடம் தஞ்சம் புகுந்து விட்டார் ரமணி அம்மா...
இத்தனை வயதை கடந்து சென்றாலும்...உடல் வாகு உறுதியாகத்தான் இருக்கும்..எல்லா வேலைகளும் சுனங்காமல் சுறுசுறுப்பாக செய்து முடிப்பார்... தினமும் வாரி முடித்து அழகாகத்தான் காட்சி அளிப்பார்....
ஓய்வு பெற்றாலும் சும்மா வீட்டில் இருக்க மாட்டார் ரமணி அம்மா....சுற்று வட்டாரத்தில் பிரசவம் பார்ப்பது...பி.பி.செக் பண்ணுவது..ஊசி போடுவது இப்படி எதாவது ஒரு வேலை வந்து கொண்டு இருக்கும் அவருக்கு.... வரும் வருமானத்தை கூட தன் மகளிடம் கொடுத்துவிடுவார்....
அந்த ஊரிலேயே யாருக்காவது உடல் நலம் சரி இல்லை என்றால் முதலில் சந்திப்பது ரமணியம்மாள் தான்...ரமணி அம்மா பார்த்து விட்டு முடியாது டாக்டர்ட்ட கொண்டு போங்கன்னு சொன்னாதான் அங்கு இருந்து நகர்வார்கள் அந்த ஊர் வாசிகள்.... இது வரை அந்த ஊரில் முக்கால் வாசி பிரசவம் இந்த ரமணி அம்மா பார்த்ததுதான்.....
தன் கணவன் சொந்தமாக சம்பாரித்து வைத்த அந்த மூனு சென்ட் இடத்தை கூட எல்லா பிள்ளைகள் சம்மத்துடன் தன் மகள் ஜெயாவிடம் எழுதி கொடுத்துவிட்டாள்....கடைசி காலம் ஜெயாவிடமே காலம் கழிக்க தீர்மானித்தாள் ரமணி அம்மா....
ஜெயாவின் கணவன் ஆறுமுகம்...தன் மருமகன் மட்டும் இல்ல தன் மகனாகத்தான் பாவித்தாள்...
ஆறுமுகம் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிகிறான்....ஜெயாவும் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறாள்...
ஜெயா காலையில் சீக்கிரம் கிளம்பிவிடுவாள்...பிறகு தான் ஆறுமுகம் வேலைக்கு கிளம்புவான்...
ஜெயாவுக்கு தன் அம்மாவின் மீது கொள்ளை பிரியம்...அது போலத்தான் ஆறுமுகமும் பிரியமாக இருப்பான்..ஜெயாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அந்த குழந்தைகளை ரெடியாகி பள்ளிக்கு அனுப்புவது இந்த ரமணியம்மா தான்...
சமீப காலமாகவே ஆறுமுகம் ரமணி அம்மாளிடம் நடந்து கொள்ளும் விதமே சரி இல்லை...அவன் பேச்சு வார்த்தைகளில் ஒரு அசிங்கமும் காமமும் நிறைந்து காணபடுகிறது.... ஒரு பெரிய மனுசி இடம் பேசுவது போல் இல்லை...ஏதோ ஒரு முறை பெண்ணிடம் பேசுவது போல் தான் அவனின் நினைவு..
பெத்த பிள்ளைக்கு சொல்வது போல் ஆறுமுகத்திடம் சொல்லி பார்த்தாள் ரமணி அம்மா...
இவனின் பேச்சு குறைவதாக இல்லை...
அடிக்கடி தன் மனைவி ஜெயாவிடம் சொல்வான் ஆறுமுகம். அம்மா நம்முடன் இருப்பது அந்த தெய்வமே நம்முடன் குடி இருப்பது போல் இருக்கிறது...
இதை கேட்கும் போது ஜெயாவின் மனதில் தன் கணவனை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருந்த்தாள்.....
ஜெயா தன் கணவன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.... இத பற்றி சொன்னாள் ஜெயா நம்ம மாட்டாள் என்பது ரமணி அம்மாளுக்கு தெரியும்.. இந்த வயசுல இந்த அசிங்கத்த யாரிடம் சொல்வது..அப்படி சொன்னாள் யாராவது நம்புவார்களா??? இத சொல்லவே ரமணி அம்மாளுக்கு நா கூசுகிறது...
அப்படி இருந்தும் பட்டும் படாமலும் தன் மகளிடம் தாம்பத்தியத்தில் ஈடு படும்படி தன் மகளுக்கு அறிவுரித்தினாள்....
இப்படித்தான் ஒவ்வொரு நாளும் நாட்கள் கடந்து கொண்டு போகிறது ரமணி அம்மாளுக்கு...
ஜெயா வீட்டில் இருக்கும் போது ஆறுமுகம் ரமணி அம்மாளிடம் நடந்து கொள்ளும் விதமே தனி..அந்த அம்மாளை தெய்வமாக தான் கருதுவான்....அம்மா என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது....அத்தனைக்கும் மரியாதையோடு நடந்து கொள்வான்...
வீட்டில் யாரும் இல்லாவிட்டால் அவனின் நடவடிக்கை பேசும் விதம் மாறிவிடும்...
பல முறை கண்டித்து பார்த்தாள் ரமணி அம்மா....அவன் திருந்துவதாக இல்லை...இது பற்றி தன் மகளிடம் சொல்லலாம் என்று கூட யோசித்தால் ரமணி அம்மா....தன் மகள் அவளின் கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் நேசத்தையும் நினைக்கும் போது..அதை கலங்க படுத்தி விட கூடாது என்று விழுங்கவும் முடியாமல். துப்பவும் முடியாமல் தவித்தாள் ரமணி அம்மா....
யாரும் இல்லாத நேரத்தில் ரமணி அம்மா வீட்டில் இருப்பதை தவிர்ப்பாள்....அப்படிதான் ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு அன்று ஒரு நாள் திடிரென்று வீட்டுக்கு வந்தான் ஆறுமுகம்....
இதோ பாருடி... உம் மகளும் தாம்பத்யம் வேண்டாம் என்று என்னிடம் இருந்து ஒதுங்கி போகிறாள்...நீயாவது அந்த சுகத்தை எனக்கு தா என்று நா கூசாமல் கேட்டு விட்டான்...
ரமணி அம்மாளுக்கும் தூக்கி வாரி போட்டது....இந்த வயதிலும் இவளின் கற்பை சூரையாட ஒரு மிருகம்...
தேப்பி தேப்பி உள்ளுக்குள் அழுதாள் ரமணி அம்மா.... மற்ற பிள்ளைகள் வீட்டுக்கும் போக முடியாத நிலை....
தினமும் ஆறுமுகத்தின் தொல்லை தாங்க முடியாத டார்ச்சர்..... இவனின் பார்வையும் சரி இல்லை...இந்த வயசான காலத்தில் துணி லேசாக விலகி விட்டால் கூட அவனின் பார்வையில் காமம் தெரியும்....
ரமணி அம்மா.. வயசு பெண்ணை போல் முடி மறைத்துதான் இருப்பாள்...இந்த மிருகத்தின் பார்வையில் இருந்து..
அன்று மாலை வேலை விட்டு திரும்பி வந்த ஜெயா அம்மாவின் முகம் வாடி இருப்பதை கண்டு விசாரிக்கக தொடக்கினாள்.....
இல்லம்மா லேசா தலய வலிக்குது....என்று கொஞ்சம் சூட காபி தாம்மா என்று கேட்டு வாங்கி குடித்தாள் ரமணி அம்மா..
இதை பார்த்து கொண்டிருந்த ஆறுமுகம்...
என்ன ஜெயா...அம்மாவுக்கு தல வலிக்குதுன்னா காபி கொடுத்த சரியாயிடுமா?....
நான் அம்மாவ ஆஸ்பத்திர்க்கு கொண்டு போய் காண்பிச்சுட்டு வந்த்துடுரேன் என்று சொன்னான்..
இதை கேட்ட ரமணி அம்மா இவனுடன் ஆஸ்பத்திரிக்கா என்று ஆடி போய் விட்டாள்....
இத்தன நல்ல மருமகன் யாருக்கு கிடைப்பா??? என்று ஜெயாவும் பெருமை அடித்து கொண்டாள்...இந்த மிருகத்தின் மற்றொரு முகம் தெரியாத ஜெயா...
ஒரு நாள் இப்படி தான் ரமணி அம்மா தனிமையில் இருக்கும் போது...தன்னுடன் உறவு வைத்து கொள்ளும் படி வற்புர்த்தினான்...

அந்த நேரம் பார்த்து அந்த தெருவில் உள்ள சரசு அம்மா வந்து தன் மகளுக்கு இடுப்பு வலிப்பதாக சொல்லி அழைத்து சென்று விட்டாள்..
இவனின் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து விட்டோம் என்ற நிம்மதியில் சரசு அம்மாவுடன் நடையை கட்டினால் ரமணி அம்மா...
இவனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிறதே தவிர குறைவதாக இல்லை....
இதற்க்காவே தன் மகள் ஜெயாவிடம்...பெரிய மகன் வீட்டில் கொஞ்ச நாள் தங்க போவதா சொன்னாள் ரமணி அம்மா...
ஜெயா அனுமதிக்கவில்லை...இதை அறிந்த ஆறுமுகம் அம்மாவுக்கு இங்கு என்ன குறை ஏம்மா சொலுங்க....ஏன் இப்ப இப்படி ஒரு முடிவு என்று மரியாதையை நிறைந்தவனாக கேட்டு கொண்டான்...
அடபாவி வேஷமா போடுறே....என் மகள் இருந்தாள் நான் உனக்கு மாமியார்..என் மகள் இல்லாவிட்டால் நான் உனக்கு தாசி....இந்த தள்ளாத வயசுல உன் பிடியில் இருந்து நான் ஒவ்வொரு நாளும் தப்பிப்பது எனக்கும் அந்த கடவுளுக்கும் தெரியும்..என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்டாள் ரமணி அம்மா...
அம்மா நீ அண்ண வீட்டுக்கு போய்ட்டா... பிள்ளைகளை பாத்துக்க எனக்கு கஷ்டம்...வீட்டிலும் ஆள் இல்ல...என்று தடுத்து நிறுத்தி விட்டாள் ஜெயா...
இந்த வயதிலும் தன்னை பாதுகாக்க துடிக்கும் இந்த ரமணி அம்மாளின் ஏக்கம்....
இதை புரிந்து கொண்டு அந்த கடவுளுக்கு சமமாக இருக்கும் ரமணி அம்மாளுடன் உறவு வைக்க துடிக்கும் இந்த மனித மிருகத்திற்கு யார் சொல்லி திருத்துவது..
காலம் எங்கே செல்கிறது...கடவுளுக்கு தான் வெளிச்சம்....

முற்றும்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Nov-14, 12:55 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 244

மேலே