அன்பென்னும் மழை-9 -தேவி

(முன் கதை சுருக்கம்: கொடைக்காணல் செல்லும் கனவோடு தூங்கிபோனால் வர்ஷிதா )

அன்று காலை 5.30 மணிக்கு காரோடு வீட்டிற்கு வந்து வர்ஷிதாவை அழைத்து செல்ல காத்திருந்தான்.

பிங்க் நிற சுடிதாரில் வைட் நிற துப்பட்டாவில் வெளியே வர, பார்த்த கண்ணை எடுக்க முடியாமல் சிலையாய் அமர்ந்திருந்தான். அலையாய் விரிந்த கூந்தல் முன்னே விழ காரின் ஹாரன் ஒலி கேட்டதும் ஓடி வந்தாள் வர்ஷு.

அவன் பார்வையை பார்த்தவள் சார், போலாமா என்றாள். அவளது குரலில் சுய நினைவுக்கு வந்தவன் அவள் தாயிடம் விடைபெற்று கிளம்பினான்.

6 மணிக்கு பஸ் வந்து விட ரியாஸ் , அழகன், பிரபு, பானு ஷீலா குரூப் , மற்ற ஸ்டாப்ஸ் வந்துவிட 6.30 மணிக்கு ஆனந்தமாய் 2 பஸ்களில் கிளம்பினர்.

பழனி தாண்டியதும் காலை உணவுக்கு கம்பெனி சார்பில் கொண்டுவரப்பட்டிருந்த இட்லி, பொங்கல் என டிப்பனை முடித்து கொண்டு பயணத்தை தொடர்ந்தனர். பானுவும், வர்ஷுவும் ஒரு சீட். ஜன்னலோரம் அமர்ந்திருந்த வர்ஷுவுக்கு மேல செல்ல செல்ல தெரிந்த இயற்கை காட்சியில் மனம் லயித்து போனாள். நெடிதுயர்ந்த மரங்கள், ஒவ்வொரு வளைவாக திரும்பி மேலே செல்கையில் அந்த மரங்களின் உச்சை கண்டு சிலிர்த்து போனாள். அந்த மரங்களில் பூத்திருந்த வண்ண வண்ண பூக்கள் , மலையின் சரிவில் பழுத்து தொங்கிய பலா பழங்களின் வாசனை மூக்கை துளைத்தது.

குரங்குகள் பலா பழங்களை பிய்த்து உண்டு விட்டு ஒன்றை ஒன்று மீதமிருந்த பழங்களால் அடித்து விளையாடிக்கொண்டு இருந்தன.

வெள்ளியை பாகாய் உருக்கி ஊற்றியது போல வழிந்து ஓடிகொண்டிருந்தது மலை அருவி.
அதை பார்த்ததும் வர்ஷுவுக்கு "ஆசை" படத்தில் சுவலட்சுமி பாடிய பாடல் ஞாபகம் வந்தது.

மலையன்னை தருகிற தாய் பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி.

அவளது ரசனையை கலைக்கும் விதமாக பானுவுக்கு வாமிட் வந்து விட அவளுக்கு ஜன்னலோர இடத்தை விட்டு மாறி அமர்ந்தாள்.

பஸ்சுக்குள் அவள் கவனம் சென்றது. ஒரே பாட்டும் டான்சுமாய் ஓடும் பஸ்ஸே அமர்களப்பட்டது . ரியாஸ் பயங்கரமாய் ஆட அதை பார்த்து வினோத் பயந்து பஸ்சுக்குள் ஓட ஒரே கூத்தாய் இருந்தது.

இத்தனை கூத்திலும், கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் அனைத்திலும் அவர்களில் ஒருவனாய் கலந்து கொண்டு அவனின் தேவதையை ரசித்தபடி அமர்ந்திருந்தான் வருண்.

கொடைக்கானலை அவள் பாதம் முத்தமிடும் போது நேரம் 9 ஆகிவிட்டது. சில்லென்று பனிக்காற்று அவளை சீண்டிபோனது. சிலீரென்று பனிமேகம் தலை துவட்டி போனது. அடடா , உலகின் மொத்த அழகையும் ஒருங்கே இங்கே படைத்து வைத்த இறைவனை நினைக்கையில் அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

க்ரோகர்ஸ் வாக் சென்ற போது அங்கே விற்ற ப்ரஷான கேரட் , குணா பள்ளம் சென்ற போது மசாலா டீ, மிளகாய் பஜ்ஜி என நாவிற்கும் சுவை குறையவில்லை.

மதிய உணவாக கம்பெனி சார்பில் நான் வெஜ் அயிட்டங்கள், சிக்கன் கிரேவி , சிக்கன் பிரியாணி என தடபுடலாய் அமர்க்களப்பட்டது.

அதன் பின் பிரயன்ட் பார்க் சென்றார்கள். பூக்களின் பலவகை அங்கே பூத்து சிரித்தது. குறிஞ்சி மலர் முதல், பல வண்ண ரோஜாக்கள் , பெயர் தெரியாத பூக்கள் என பூத்து குலுங்கின. அது அவள் மன நிலையை லேசாக்கியது.

பின் எல்லோரும் படு சவாரி செய்ய போக , வர்ஷிதா மட்டும் தூரத்தில் ஒரு அருவி வெள்ளி கோடை தெரிய அதை பார்க்க மெல்ல நடக்கலானாள்.

சிறிது தூரம் சென்றிருப்பாள். வர்ஷிதா, வர்ஷிதா இரு நானும் வரே. நீ எங்க போறே என்றபடி ஓடி வந்தான் வருண்.

சார், அங்கே தூரத்தில் தெரியுதே அருவி அதை பார்க்க போறேன் சார்.

சரி நானும் வரேன். எனக்கும் இங்க சுத்தி பார்க்க ஆசை. நான் இங்கே ஏற்கனவே பலமுறை வந்திருக்கேன்.

அப்படியானால் உங்களுக்கு வழி தெரியுமா சார் என்றாள்.

ஓ தெரியுமே. வா நான் அழைத்து போகிறேன். அதோ அந்த செடியில் தெரிகிறதே அது தான் குறிஞ்சிப்பூ.

ஐ , இதுவா. இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்று குழந்தை போல் குதித்தாள்.

வழி நெடுக பார்த்த ஒவ்வொன்றை பற்றியும் அவன் விளக்கம் தந்தபடி நடக்க சீக்கிரமே அந்த அருவியின் பக்கம் சென்று விட்டார்கள்.

அருவியின் சாரல் அவள் மேனியில் தொட்டு விளையாடியது. அதை பார்த்து கொண்டே நின்றாள்.

அங்கே ரெண்டு வண்ணத்து பூச்சிகள் புதிதாய் பூத்த பூவில் தேனுண்ண போட்டி போட்டு பறந்தன.

அவை போவதே எட்டி பார்த்து கொண்டிருந்தவள் வைத்திருந்த கால் இடற அப்படியே சரியாய் போனாள்.

அவளை ஒரே ஏட்டில் தாவிப்பிடித்த வருண் அவள் முகத்தை மிக அருகில் கண்டான்.
நிலவும், மலரும் தோற்று விடும் அழகு. அந்த அருவியில் துள்ளும் மீன்கள் கூட இவள் கண்ணை கண்டால் பொறாமை கொண்டுவிடும்.

அவளவு அழகு. ஆனால் மருளும் அந்த விழிகள் இப்போது மானை போட்டிக்கு கூப்பிடுதே.

அவன் பார்வை கண்ணை விட்டு மெல்ல கீழிறங்க ரோஜா நிற இதழ்கள் அவனுள் கிறக்கத்தை ஏற்படுத்த, மெல்ல அவளின் முன் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டு , நெற்றியில்
தன் இதழ் பதித்தான்.

அவளுக்கும் அதை தடுக்க தோன்றவில்லை. ஆள் மனதில் அவனை தன் உயிர் என்று எண்ணி விட்டவலல்லவா , எப்போதோ அவன் தன் இதயத்தில் குடியேறி விட்டதை அவள் அப்போது தான் உணர்ந்தாள்.

அவன் பிடி இறுகியது. தானாய் அவளின் கைகள் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாகியது.

அந்த மோன நிலை , ஒரு நிமிடமோ, ஒரு யுகமோ நீடித்து தெரியவில்லை.

அங்கே கிளையில் காதல் விளையாட்டில் இருந்த இரு அணில்களின் சத்தத்தால் அந்த மோன நிலையிலிருந்து முதலில் விழித்தவள் வர்ஷிதா தான்.

ஒரு நொடியில் சூழ்நிலையை உணர்ந்தவள் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயன்றாள்.

அவன் பிடி மேலும் இறுக அவனை பிடித்து தள்ளினாள். நிலை தடுமாறியவன் ஒரு மரத்தில் பின் மண்டை மொத்த அப்படியே கண்கள் சொருக கீழே விழுந்தான்.

(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (25-Nov-14, 2:16 pm)
பார்வை : 234

மேலே