விதைத்தது நான் அறுவடை செய்பவள் நீயா

விதைத்தது நான் அறுவடை செய்பவள் நியா?

கவின் காலை எழுந்து ரெடியாகி ஒரு முறை பூஜை ரூமில் புகுந்து...அவன் மனதில் உள்ள அத்தனை தெய்வத்தையும் மனதில் நினைத்து கொண்டு தன் பிரார்த்தனைகளை தன் தெய்வத்தின் முன்பு கோரிக்கையாக வைத்தான்...
அவனின் அம்மாவும் கல்யாணி ஒரு நூரு முறையது அந்த தெய்வங்களை கை எடுத்து குப்பிட்டு இருப்பாள்... அவளின் பிரார்த்தனைகளோடு....
அவனின் அப்பா ராஜா துரை திரும்ப திரும்ப சொன்னதையே திரும்ப திரும்ப சொலிக்கொண்டு இருந்தான்...
கவின் பத்திரமா கேக்கிற கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லிடுப்பா...எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது..சரி... சரி.. டைம் ஆய்டுச்சு....கிளம்பு என்று சொல்லி முடித்தார்....
இருடா போனமாசம் திருப்தி கோயில் திருநிர் இருக்கு நெத்தில வச்சு விடுறேன் என்று கல்யாணி அவனின் நெத்தியில அந்த திருநிரையும் வைத்து தன் மகன் கவினை இருவரும் வழி அனுப்பி வைத்தனர்..
வழி அனுப்பி வைத்த கையேடு....கல்யாணி மீண்டும் அந்த பூஜை அறையுனுள் புகுந்து..மீண்டும் பிரர்த்தனையில் இறங்கினாள்...
ராஜா துரையும் ஒரு வித பதட்டத்துடன் தான்..இருந்தான்....இருத்தாலும் அவனின் நினைவுகள் தன் ரிட்டைடு ஆகி இந்த நாலு வருஷத்துல வந்த பணமும் தீர்ந்து போச்சு தன் மகள் தேவியையும் நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு...இந்த கவினுக்கும் இந்த வேலை கிடச்சுச்ன்னா...
அவன் சம்பாதிக்கிறது... தன் பென்சினும் வைத்து எப்படியோ குடுபத்த தள்ளிடலாம்..இருக்கிற கடனை அடச்சுடலம்... தேவி கல்யாணத்துக்கு வாங்கினது... இன்னும் அந்த கடனே தீரல....
கவினுக்கும் ஒரு கல்யாணத்த பண்ணிடலாம்....என்று பல வாறு யோசித்தவனாய் நாற்காலில் அமர்ந்திருந்தான்....
கவினும் அந்த நேர் முக தேர்வு நடக்கும் இடத்தை தேடி பிடித்து ஒரு வழியாக அந்த அலுவலக அருகில் அடைந்தான்..
அங்கு கூடி இருந்த கூட்டத்தை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து போனான்...
அவனுக்கு இது முதல் முறை என்பதால் சற்று படபடப்பு அதிகமாகவே இருந்தது.
அந்த அலுவலகத்தில் உள்ளே நுழைந்தவன்.....
மிக பெரிய நிறுவனம்....இங்கு வேலை செய்கிறேன் என்று சொல்வதற்கே ஒரு தனி பெருமை.... பார்க்க போனால் நல்ல சம்பளமும் கிடைக்கும்....என்று சுற்றும் முற்றும் பார்த்து யோசித்தவனாய் உள்ளே நுழைவதற்கே சற்று தயக்கமும் பயமும் அவனிடம் இருந்தது அதையும் மீறி உள்ளே நுழைந்தான் கவின்....
அங்கு உள்ள இருக்கைகள் நிறைந்தது.... பல பேர் நின்று கொண்டும் இருந்தார்கள்...அந்த கூட்டத்தோடு அவனும் ஒருவனாக நின்று கொண்டான்..
அவனின் படபடப்பு இன்னும் அவனை விட்டு போகவில்லை...
நமக்கு இந்த வேலை கிடைக்குமா??? என்று கூட யோசித்தான்.... அவனுடைய யோசனைகளை பலவாறு சிதறியது...இருப்பினும் தன்னை தைரிய படுத்தி கொண்டு.... அவனும் ஒரு பக்கமாக நின்று கொண்டு இருந்தான்..
அங்கு உள்ள உள் அறையில் இருந்து ஒரு காக்கி சட்டை போட்ட ஒரு பியுன்..ராம கிருஷ்ணன்....என்று குரல் கொடுத்து கொண்டு வெளியே வந்தான் அந்த கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுந்து உள்ளே சென்றான்...
அங்கு உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தனர்....
அந்த கூட்டதிலும் சிலர் பேசி கொண்டனர்....
டேய் இவங்க ஏற்கனவே செலக்கிட்டு பண்ணிட்டு சும்மா கண் துடைப்புக்கு இண்டர்வி பன்னுராங்கடா....
இதை கேட்கும் போது கவின்னுக்கு ஒரு பயம் உள் மனதில் தோன்றுகிறது.
அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வந்தான் ராம கிருஷ்ணன்...
அடுத்தபடியாக முரளி என்று அந்த காக்கி சட்டை குரல் கொடுத்தது....
ராம கிருஷ்ணனிடம் உள்ளே நடந்த சம்பவத்தை பற்றி அவனை சுற்றி ஒரு கூட்டம் கேட்டு கொண்டு இருந்தது...அவர்களுடன் கவினும் கேட்டு கொண்டு இருந்தான்....
அடுத்த பத்து நிமிடத்தில் கவின்...என்று அந்த காக்கி சட்டையின் குரல் ஒலிக்க....
படபடப்புடன் கவின் உள்ளே சென்றான்....
கையில் வைத்திருந்த பைலை அங்கு உட்காந்திருத்த அதிகாரிகளிடம் பைலை கொடுத்து வீட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தான்...கவின்....

அதிகாரிகள் அந்த பைலை பார்த்து விட்டு...அவர்களுக்குள் நல்ல கேண்டிடேட்...நல்ல மார்க்கு வாங்கி இருக்கிறான்..வெரி நைஸ்...குட்....என்று....
அந்த அதிகாரிகளுக்குள் ஒருவர்க்கு ஒருவர் ஏதோ பேசி கொண்டார்கள்....
அவர்கள் பேசி கொள்வது கவினுக்கு ஒன்றும் புரியவில்லை..
ஓகே... கவின் நீங்கள் தேர்தேடுக்க பட்டால் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு தபால் மூலம் அறிவிக்க படும் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்..
நேர் முக தேர்வை முடித்து வீட்டு நேரடியாக வீட்டை நோக்கி நடந்தான் கவின்...
இவன் வருகைக்காக காத்திருந்த கல்யாணியும்,ராஜ துரையும்.....
கவினை கண்டதும் மிகுந்த ஆவலோடு....
என்னப்பா என்ன ஆச்சு என்று ஒரு எதிர் பார்ப்போடு கேட்டனர்....
விவரத்தை சொன்னான் கவின்....
இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்....
இந்த ஒரு வாரம் இவர்களை விட்டு போவது வருடங்கள்..போனது போல் இருந்தது...
அவ்வபோது தேவியும் போன் மூலம் கேட்டு கொள்கிறாள்...
அந்த தெருவுக்கு வரும் தபால் காரனை தினமும் கேட்டு கொண்டு இருக்கிறாள் கல்யாணி....
இப்படியாக அந்த வாரமும் அவர்களை விட்டு சென்றது....எந்த விவரமும் இல்லை....
அவர்களின் மனசும் லேசான கவலைக்குள் ஆகியது....
அப்போது தான் அந்த கடிதம் அவர்கள் கைக்கு கிடைகிறது....
பிரித்து பார்த்தான் ராஜ துரை அதை கண்டதும் சந்தோசம் நெச்சை முட்டியது.....


கல்யாணி தெய்வம் நம்மள கை விடல...என்று ஆனந்த கண்ணீர் வடிய ராஜ துரை.... தன் மனைவி இடம் விவரத்தை சொல்ல...
அந்த நேரத்தில் கவின் வெளியே போய் விட்டு வீடு திரும்பினான்....விவரத்தை அவனிடம் சொல்ல...
அவனின் சந்தோசம் எல்லை இல்லாமல் சென்று கொண்டு இருந்தது..
தேவியும் கேள்வி பட்டு தாய் வீடு வந்து அண்ணனை கட்டி பிடித்து முத்தமிட்டாள்.....
படித்து பட்டம் பெற்று ஒரு வேலையும் கிடைத்து...தேவி கல்யாணத்திற்கு வாங்கிய கடன் பாதி தீர்ந்து கொண்டு இருக்கும் போது நல்ல இடத்தில் இருந்து பெண் வந்ததால்....
கவினுக்கு திருமணமும் நடத்தினர் அவனின் பெற்றோர்....
கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் இருக்கும்...கவினின் மனைவி சுலோச்சனா....
தனி குடித்தனம் போக வேண்டுமாய் தன் கணவனிடம் நச்சரித்தாள்....
தாய்,தந்தையை விட்டு விட்டு வர மாட்டேன் என்று மறுக்கிறான் கவின்..இது பிரச்சனையாக மாறி...தனி குடித்தனம் போக கூடிய நிலை உருவாகிறது கவினுக்கு...
வாங்கும் சம்பளத்தை எல்லாம் தன் கைக்கு வரும் படி செய்து விட்டால் சுலோச்சனா....
பாதி கடனையும் அடைக்க முடியாமல் தவிக்கிறான் ரமா துரை...
தன் செலவுக்கே காசு இல்லாமல் இருக்கிறான் கவின்...
பெற்று வளர்த்து படிக்க வைத்து இந்த இருபத்தி அஞ்சு வருஷமா?பாடு பட்டு வளர்த்த பெற்றோருக்கு பலன் ஒன்றும் இல்லை....நேற்று வந்தவள்...
விதைத்து வளர்த்து ஆளாக்கியது ஒருவன் அதை அறுவடை செய்பவள் ஒருவளா???
மருமகளாக வர வேண்டும்...ஆனால் வந்த மறுநாளே....குடுபத்தை பிரித்து கொண்டு போவது....பெண்களே யோசிக்க வேண்டும்...நமக்கும் நாளை மருமகள் வருவாள்...நாமும் இன்று விதைகிறதை நாளை அறுவடை செய்ய வேண்டும்...நாளை என்பது வெகு தூரம் இல்லை....நாமும் அறுவடை செய்ய வெகு தூரம் இல்லை..என்பதை சுலோச்சனவுக்கு சொல்பவர்கள் யார்?

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Nov-14, 2:54 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 193

மேலே