கணவன் + மனைவி = குழந்தை

கணவன் + மனைவி = குழந்தை

யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தாள் மஞ்சுளா.....
அஹா....நீயா??? வாம்மா என்று அன்போடு வரவேற்றாள்....
அடுத்த வீட்டு மாலதி தன் குழந்தை ஆகாஷுடன்....
என்னப்பா புது ட்ரஸ் எல்லாம் போட்டு...ரொம்போ ஜோரா இருக்கானே...
இல்லம்மா இன்னைக்கு ஆகாஷுக்கு பிறந்த நாள்...
அப்படி சொல்லு...ஹாப்பி பர்த் டே டு யு.என்று ஆகாஷுக்கு முத்தம் கொடுத்தாள் மஞ்சுளா...
கொண்டு வந்த கேக் பாக்கட்டை மஞ்சுளாவிடம் கொடுத்தாள் மாலதி...
குளித்து விட்டு இடுப்பில் துண்டுடன் வந்த மஞ்சுளாவின் கணவர் செல்வம்....
ஹாய் குட்டிபாப்பா எப்படி இருக்கே..என்று செல்வமும் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு டிரஸ் மாத்த உள் அறைக்கு சென்று விட்டான்...
உள் அரையில் இருந்து வரேன் மஞ்சுளா ஆகாஷை கொஞ்ச நேரம் வச்சிரு..இதோ இப்ப வந்துடுறேன் என்று குரல் கொடுத்தான் செல்வம்.
மாலதி கொஞ்சம் டீ எடுக்கட்டா..கொஞ்சமா டீ...
இல்லம்மா வேண்டாம்....இருக்கட்டும்..என்று சொல்லிவிட்டாள் மாலதி...
ட்ரஸ் மாத்திவிட்டு வந்த செல்வம் ஆகாஷ் கையில் ஒரு நூரு ருபாய் நோட்டை திணித்தான்...
வேண்டாம் என்றாள் மாலதி...
நல்ல நாளும் அதுவுமா...வேண்டாம்ன்னு சொல்லாதே மாலதி....என்றாள் மஞ்சுளா...
சரிமா என்று... விடை பெற்று போய் விட்டாள் மாலதி...
மாலதி போய் கொஞ்ச நேரத்தில் மஞ்சுளா தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்...
தன் மார்போடு கட்டி அனைத்து கொண்ட செல்வம்...அவளை ஆறுதல் படுத்தினான்...
என்ன செய்றது மஞ்சு....கடவுள் நமக்கு எப்ப குழந்த பாக்கியத்த கொடுக்கிறானோ கொடுக்கட்டும்....இதுக்கு போய் யாராவது அழுவாங்களா? என்ன குழந்த மாறி....ஆம்மாம் நமக்கு குழந்த பிறக்கிற வர நீ தான் எனக்கு குழந்த...
எங்கே சிரி...சிரிமா...எனக்கு ஆபிசுக்கு டைம் ஆய்டுச்சு....என்று அவளை ஆறுதல் படுத்தி விட்டு ஆபிசுக்கு கிளம்பினான் செல்வம்...
கல்யானம ஆகி இந்த பதினைந்து வருத்ததுல இவள் வேண்டாத தெய்வம் இல்லா....ஆஸ்பத்திரி மருந்து...ஏன் சில கோவிகளில் மண்ணு சோறு கூட சாப்பிட்டு நேர்த்திகடனை செலுதியவள் மஞ்சுளா...இது வரை பேருக்கு கூட மசக்கை ஆனது இல்லை....இதனால் கூட தாம்பத்தியத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில புத்தகங்களையும் வாங்கி படித்து அதன் படி தாம்பத்தியத்தில் ஈடு படவும் செய்தாள்.எதுவும் உதவவில்லை இவளுக்கு...
ஆணோ,பொண்ணோ ஒரு குழந்தை போதும்...என்று எவ்வளவோ முயற்சித்தும் பலன் இல்லை....இதவே இவளின் வாழ்க்கைக்கு பெரும் ஒரு வேதனை...
யாராவது பர்த் டே என்று குழந்தையை தூக்கி கொண்டு வந்தாள்...இவளின் எண்ணம் எல்லாம் தனக்கு ஒன்று இல்லையே என்ற ஏக்கம் இவளை ஆட்டி படைக்கும்....யாராவது குழந்தையுடன் கண்டால் கூட இவளுக்குள் மன வேதனை குழப்பம் என்று பல கவலைகள் இவளை சுற்றி வரும்...

டி.வியில்.வரும் செக்ஸ் டாக்டர்கள் சொல்லும் கதைகளையும் கவனமாக கேட்பாள்.. அந்த நிகழ்ச்சிகளை தவறவிட மாட்டாள்....அதை கேட்டு அதன் படியும் அந்தரங்கத்தில் ஈடு படுவாள்...இவள் ஒரு குழந்தைக்காக படும் பாடு அளவே இல்லை...
தினசரி பத்திரிகைகளில் வரும் சில சம்பவங்கள்...குழந்தயையை ஆற்றில் வீசிய தாய்...குப்பையில் எறிந்த தாய்..கழுத்தை நெரித்த தாய்.. கள்ளி பால் கொடுத்த தாய் என்று படிக்கும் போது.அந்த தாய்மார்களை திட்டுவது மட்டும் இல்லாமல்...அந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை தனக்கு கொடுக்க கூடாதா என்று கூட அந்த தெய்வத்திடம் கேட்டு கொள்வாள்...
ஆனால் சும்மா சொல்ல கூடாது செல்வம் இவளை ஒரு குழந்தையாக தான் பாவித்தான்....
வரும் வெள்ளி கிழமை கூட ஒரு நேர்த்தி கடன் தன் கணவனுடன் ஈரத்துணியோடு அங்கபச்சகம் செய்ய வேண்டுமாய் தன் கணவனிடம் கேட்டு கொண்டாள்....
அதற்கும் சரி என்றான் செல்வம்...
அதன் படி வெள்ளி கிழமை நேர்த்தி கடனை செலுத்த அந்த கோவிலை அடைந்தத இருவரும்.....
அவர்களின் நேர்த்திகடனை ஆரம்பித்து நேர்த்திகடனை செலுத்தி கொண்டு இருந்தனர்....
அப்போது செல்வத்துடன் படித்த மோகன் ராஜ்... குழந்தை இல்லா தம்பதியரின் சிறப்பு மருத்துவர் டாக்டர் மோகன் ராஜ் வெளி நாட்டில் பணி புரிந்து வருகிறான்...இவர்கள் இருவரும் பள்ளி கூட படிப்பு வரை நண்பர்கள்...பிறகு ஆளுக்கொரு வழியில் போய் விட்டதால்..இவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போய் விட்டது...
அதன் பிறகு இன்று தான் அந்த கோவிலில் வைத்து சந்திக்க நேர்ந்தது...இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் அடையாளம் காணப்பட்டது....
ஹாய் மோகன் என்னடா....எப்படி இருக்கே....ஸ்கூல் லைப்ல பார்த்தது...என்று இருவரும் பழைய நினைவுகளோடு
ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்...
அருகில் நின்று கொண்டு இருந்த தன் மனைவியை அறிமுகபடுத்தினான் மோகன்... எம் மனைவி சுசிலா இவளும் ஒரு டாக்டர் குழந்தை இல்லா தம்பதியரின் சிறப்பு மருத்துவர்..
அதை போலவே தன் மனவியை அறிமுகம் செய்து வைத்தான் செல்வம்..
இவர்கள் இருவரின் கோலம் கண்டு விவரம் கேட்டான் மோகன்....
விவரதத்தை எடுத்து சொன்னான் செல்வம்...மோகன் தனக்குள் சிரித்தவனாய்.....
செல்வத்தையும்,மஞ்சுளாவையும்....ஒரு செக்கப் செய்ய வேண்டுமாய் கேட்டு கொண்டான்...
இது போல நூறு செக்கப் செய்து ஆகி விட்டது...என்று சலித்து கொண்டான் செல்வம்....
உடன் இருந்து கொண்டு மஞ்சுளா செய்துதான் பார்கலாமே என்று குறுக்கே சொன்னாள்...
சரிடா செல்வம் நா நாளைக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் அதுக்குள் இந்த செக்கப்பை முடித்து வை என்று விடை கொடுத்து பிர்ந்தனர் அந்த கோவிலில் இருந்து....
மறு நாள் சொன்ன படி மோகன் மற்றும் அவனது மனைவி சுசிலா, செல்வம் வீட்டுக்கு வந்தனர்....
ரிபோர்ட்டை பார்த்து விட்டு சலித்து கொண்டவனாய் மோகன் சின்ன பிரச்சனடா....உம் மனைவி மஞ்சுளாவுக்கு ஒவரீயில் சின்ன அடைப்பு இருக்கு....இத சுலபமா சரி பணிடலாம்....இதுக்கு போய் கோவில் குளம்....இதுவர எத்தன டாக்டர பார்த்திருக்கே யாருமே இத பத்தி ஒனும் சொல்லலையா....அட பாவமே...
இந்த இந்தியாவிலே உள்ள சில மருத்துவ மனைகள் ஒரு வியாபார ரீதியாகத்தான் செயல் படுகிறது....
இப்ப மட்டும் ஒன்னும் இல்லை...நான் ஒரு மூனு மாதம் இங்க இருபேன் அதுக்குள்ள உம் மனைவி தாய்மை அடச்சுடுவா...நீ ஒன்னும் கவலை படதே...என்று ஒரு தாளில் மாத்திரை மருந்துகள் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மோகனும் அவனின் மனைவி சுசீலாவும்.....
இப்படியாக ஒரு இரண்டு மாதம் போய் இருக்கும்...
ஒரு நாள் செல்வம்...மோகனுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான்....
டேய்...மோகன் மஞ்சுளா அம்மாவாக போராட....என்று அவன் சந்தோசஷத்தை வெளி படுத்த.....
மோகனும் டேய் இது வர இந்த மாதிரி எத்தன கேஸ் பாத்துருக்கேன்...இந்த மாறி விஷயத்துல தரமான டாக்டரா பார்கர்த விட்டுட்டு டி.வில.விளம்பரம் செய்ற டாக்டர் பார்த்த.....கொஞ்சமாவது புரிந்து செயல்படுங்கடா என்று அறிவுரித்தினான் டாக்டா மோகன்....

முற்றும்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Nov-14, 3:05 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 260

மேலே