ஒரு காதல் போராட்டம் இரு மனங்களிலும்-புவனா சக்தி
அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய கட்டிடம் அது .அவரவர் வேலையை அவரவர் செய்துக்கொண்டு இருக்க ஒரு அறையில் பெரிய விவாதாம் நடந்துக்கொண்டு இருந்தது .தனது நிறுவனங்களை விரிவடைய செய்ய தனது நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து மீட்டிங் அமைக்கப்பட்டு இருந்தது .அப்போது அவனது அலைப்பேசி சிணுங்க அதை எடுத்துக்கொண்டு ஒன் மினிட் என்று சொல்லிவிட்டு ஆன் செய்து பேசியவன் மறுமுனையில் இருந்து வந்த செய்தியை கேட்டு சிலையை அசையாமல் நின்றான்.சிறு அமைதிக்கு பின் இப்போதே வருகிறேன் என்று Call cut செய்து விட்டு இன்று மீட்டிங் முடிந்தது அனைவரும் அவரவர் வேலைகளை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சில முக்கியமான வேலைகளை அவரது உதவியாளரிடம் சொல்லிவிட்டு தனது கார் இருக்கும் இடம் நோக்கி சென்றான் அடுத்து இருபதாவது நிமிடம் அவன் கார் சென்ற இடம் அவனது வீடு .
அவன் உள்ளே செல்ல வீட்டின் உள் இருந்து டாக்டர் வெளியே வந்தார்.அங்கிள் என்ன ஆச்சு என்று கேட்க don't worry அர்ஜுன் ஒரு சின்ன அட்டக் தான் எதுவும் Problem இல்ல என்று சொல்லி விட்டு சில மருந்துகளை எழுதி தந்து இருக்கேன் அதை Follow பண்ணுங்க அப்பறம் அவர் மனசை கஷ்டப்படுத்தற மாதிரி எதுவும் நடக்காம பாத்துகோங்க என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் .உள்ளே அர்ஜுன் சென்றதும் ஒரு பெண் அர்ஜுனை கட்டி தழுவி அழத்தொடங்கினார் .
(யார் அந்த பெண் ,அர்ஜுன் யார் அந்த நோயாளி யார் என்று நாளை பார்ப்போம் .)
-தொடரும்