சீத்தாபதி நகர் பாகம்---1

நான் பிறந்த ஊர் கமுதி, நான்காம் வகுப்பு வரை வளர்த்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில். நேடிவ் பிளேஸ் என்று எதாவது மனுவில் கேட்டால் ராமநாதபுரம் என்று எழுதுகிறேன். நான்காம் படிப்பு முடித்து சென்னை வந்து செட்டில்லாகிவிட்டோம். இப்போது சென்னையில் உள்ள டாப் பிலேச்னு சொல்ல கூடிய வேளச்சேரியில் குடியேறினோம். சீத்தாபதி நகர் என அழைக்ககூடிய இடத்தில ஒரு பள்ளியில் தான் சேர்த்தேன், பன்னிரெண்டாம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன்.
இந்த கதையில் நான் மற்றும் என் நண்பர்கள் அந்த சீத்தாபதி நகர் தெருக்களில் செய்த கலாட்டவை மையாமாக வைத்து இந்த கதையை எழுதிருக்கிறேன். இந்த கதையில் வருவது நிஜத்தை மையப்படுத்தி அல்ல. பல ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே இந்த கதையில் கற்பனை சம்பவங்கள் கலந்து தான் இருக்கின்றன. இந்த கதையில் பல நாயகர்கள். என் முதல் இந்த முயற்சி படைப்பு உங்கள் உள்ளங்களை சென்றடையும் என நம்புகிறேன்.

எதிர் கடை!
அமைதியான சூழல் மிகவும் அம்சமான இடம் தான் சீத்தாபதி நகர். வீதி முழுக்க மரங்களும், மாடி வீட்டு பங்களாக்களும் அதிகம் காணப்படும் ஏரியா. ஒரு அமைதியான ரெசிடென்சியல் ஏரியா என்று சொல்வார்களே, அதற்க்கு முளுப்போருத்தம் சீத்தாபதி நகர் தான். அங்கு நான் படித்த பள்ளி ஒரு அடுக்கு மாடி வீடு போலதான் காணப்படும். புதிதாக வருபவர்கள் பள்ளியின் போர்டை பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளிக்கு இரண்டு கேட்டுகள் உள்ளன. முன் கேட் கொஞ்சம் நீளமாகவும், பெரிதாகவும் இருக்கும். பின் கேட் அதை நாங்கள் கேட் நம்பர் டூ என்று சொல்லுவோம். சீத்தாபதி நகரில் ஒரு தெரு வழியாக வந்தால் முதல் கேட்டை பார்க்கலாம். அதற்க்கு பேரல்லேல்லாக இருக்கும் சாலை வழியாக பார்த்தல் கேட் நம்பர் டூ தென்படும்.
முன் கேட் எதிரே இருக்கும் கடைதான் எங்கள் எல்லோருக்குமே மதிய உணவு வேலைகளிலும், பிரேக் விடும் நேரங்களிலும் தீன்பண்டகடை. இந்த தலைமுறை குழந்தைக்குள் அப்போது நான் சாப்பிட்ட தேன் மிட்டாய்களையும், கலர் கலர் மிட்டாய்களையும், இன்னும் பெயர் மறந்து விட்ட நிறைய தீன்பண்டகளையும் கண்டிப்பாக பார்த்திருக்க மாட்டார்கள். தேன் மிட்டாயும் கடலை பருப்பு ஐட்டங்களும் அந்த கடையில் ரொம்ப பேமஸ்.
அப்படி ஒரு நாள் என் நண்பன் சுரேஷ் , வாட மச்சான் நம்மா போய் எதாவது வாங்கி சாப்பிடலாமென்று என்னை அழைத்தான். டேய் என் கிட்ட இருந்த காசுலாம் காலி ஆகிருச்சு மதியமே வாங்கி சாப்டுடேண்டான்னு சொன்னேன். என் பக்கத்தில் இருந்த தாமரை செல்வன் என்கிட்ட இருக்குடா என்று சொல்ல மூன்று பேரும் போனோம். கடைக்கு சென்றோம் அங்கு முதலாளி இல்லை வேலை செய்யும் சிறுவன் தான் இருந்தான். பள்ளி சிறுவர்களும், மேல் வகுப்பு படிக்கும் பெண்களும் கடையை சூழ்த்து. அவர்களுக்கு தேவையானவையை வாங்கி கொண்டு இருந்தனர். நாங்க மூவரும் சென்று இது வாங்கலாமா அது வாங்கலாமா என்று எதை வாங்கலாமென்று பேசிக்கொண்டு இருந்தோம். கடையில் கூட்டம் அதிகமானதால் அந்த கடையில் வேலை செய்யும் சிறுவன் தெனரிக்கொண்டு இருந்தான்.
“சுரேஷ்” டேய் தம்பி அந்த டப்பால இருக்கிற முட்டாய எடுக்க சொன்னான். அவன் திரும்பி டப்பாவை எடுப்பதற்குள் சுரேஷ் கைக்கு பக்கத்தில் இருத்த சில மிட்டாய்களையும், சாக்லேட்டுகளையும் எடுத்து பாக்கெட்டில் போட்டு கொண்டான். அந்த சிறுவன் இவன் செய்யும் செயலை பாத்தான இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை. எனக்கும் செல்வத்துக்கும் இவன் என்ன செய்ரானென்று ஒன்றும் புலப்படவில்லை.
கடையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. டேய் இவன் திருடிட்டான்னு செல்வன் என்னிடத்தில் சொன்னான். யாரும் எதும் பேச வேண்டாம் வாங்க போலாம் என்றான் சுரேஷ். மூவரும் அங்கு இருந்து நகரத்தோம்.
அடுத்த நாள் கலையில் நான் என் சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தேன். எதிர் கடை முதலாளி கடைக்கு வெளியே நின்று இருந்தான். பள்ளி கேட் அருகே சென்ற பொது “டேய் நில்லுட”
“நேத்து கடைல இருந்து என்ன திருடின” வேலைக்கார பையன் சொல்லிட்டான், என்றான்
“ஐயோ நானா?” நான் எதும் திருடல..
என்று கத்தினேன் என்னை பள்ளிக்கு இழுத்து சென்று பீட்டி சாரிடம் நல்ல போட்டு கொடுத்துவிட்டான்.
அந்த சிறுவன் படுபாவி பையன் இப்படி மாத்தி சொல்லிட்டானே. நான் இல்லை சார் சுரேஷ் தான் எடுத்தான் என்று பீட்டியிடம் சொன்னேன். அந்த லூசு பீட்டி சார் ஏன்டா போய் சொல்ரேன்னு ஒரு அரை விட்டான். எனக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. அசிங்கத்துடன் திருடன் பட்டம் வேற.
இபொழுது அந்த கடை வழியாக சென்றாலும் அந்த நியாபகம் தான் வரும், என்னுள் எண்ணிலடங்கா கோவங்களும், அன்றைக்கு நாம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எரிச்சலும் உண்டாகும்.

எழுதியவர் : முஹமது ரபிக் (25-Nov-14, 7:16 pm)
பார்வை : 349

மேலே