செந்தமிழ்நாடு முனைவர் சமகாதேவன் கவிதை
பள்ளிகளிலெல்லாம்
வங்கிகளின் விரிவாக்கக் கிளைகள்
கோடிகளை வசூலிக்க வசதியாய்
வாடகை அதிகமென்பதால்
ஆம்புலென்சுகள் அதிகம் பயணிப்பது
மயானங்களை நோக்கித்தான்
பிரசவ ஆஸ்பத்திரியின்
லேபர் வார்டிலே வரவேற்பு வளைவு போட்டால்தான்
குழ்ந்தையே வெளியில் வருவேனென்கிறது
அரசியல் வாதியின் அடுத்த வாரிசுகள்
அடம் பிடிக்கின்றன.
தமிழ் படிக்கத் தமிழ்க் குழந்தைகள்
புலம்பெயர்ந்த தமிழர் நாடுகளுக்குப்
பயணமாகிக் கொண்டிருக்கின்றன.
ஓடி விளையாடிய
பாரதியின் பாடப்பாக்கள்
சிலந்தி வலைத் தொடர்களுக்குள்
சிறைப் பட்டுக் கிடக்கிறார்கள்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து
பாயுது காதினிலே