முந்திரிக்காடு

இது வெறும் கதையல்ல
வெறும் படைப்பல்ல கண்ணீர் ............உண்மைக் கதை
தொடுபவன் கைகள் பொன்னாகும்
காதலுடன் ...........................................முத்தாயி ஆயா !


ஐய்யா.. என் ராசா ...எங்கய்யா இப்டி போறீக.....


குச்சி ஊனி குச்சி ஊனி நீ நட்டது போதும்
உச்சி நீணி உச்சி நீணி நீ பார்த்தது போதும்
செரசத் தாங்கி தெரசாக் கிடக்கு காணி
செவத்தல மேட்டுல பாத்தது போதும் ஏ ராசா....


முத்தாயீ..வரேன் புள்ள பசிக்கு கடல இருக்கு
தாகத்துக்கு நீசத் தண்ணீ இருக்கு
அது போதும் புள்ள நாம போவோம்
கடலை கொல்லைக்கு நம்ம முந்திரி காணி கொல்லைக்கு..


வெயிலு ....கூசுதய்யா...என் கண்ண கூசுதய்யா...
உன் வேட்டிய துண்ட தலையில போட்டுக்கய்யா
என் சேலைத் தலைப்ப என் தலைல நா போட்டுக்குறேன்

மெதுவா அடியெடுத்து அடியெடுத்து பெயணம் போ வோமடி புள்ள ....
எனக்கு என் கைத்தடி இருக்கு எம் மனசு பூரா நீ
உனக்கு நா இருக்கேன் கவலை கொல்லை பாப்போம் வா புள்ள ..


தோ வாரேன் த்தோ வாரேன் என் ராசா ...துணைக்குத் துணையா
என் வெத்தலப் பொட்டி எனக்கும் வாயசைக்க
உனக்கு புகையிலையும் உன் வாயசைக்க
மென்னு மென்னு துப்பி துப்பிச் சாயம் பூசுவோம் நம்ம பூமிய.....

முந்திரி காடு தொடரும்......

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Nov-14, 3:51 pm)
பார்வை : 285

சிறந்த கட்டுரைகள்

மேலே