என்னவனின் பிரிவு -சகி

பிரிவே ............
காரணமின்றி பிரிந்து
சென்ற என் கனவு காதலே....
போராடி போராடி
தோற்றுவிட்டேன்- என்
காதலில் உன்னால்...
அந்நாட்களில் தென்றலோடு
கலந்த உன் மௌனக்காதல் ...
இன்றோ உன் பார்வையற்ற
மரணத்தின் பிடியில் என் காதல் ...
நொடி ஒவ்வொன்றும்
மாண்டுக்கொண்டே என் இதயம்...
வாசலில் கோலமிட்டு
என் கவலைகளை புள்ளிகளாக
வரைந்தேன்....
சற்று நிமிர்ந்தேன் ..
உன் உண்மைக்காதலின்
மௌன மொழிகளை
பார்வையில் மழையாக
பொழிந்தாய் ...
என் வலிகளும் உன்
அன்பு மழையிலே கரைந்தது ...
ஏனோ மறைத்தாய்
உன் காதலை ...
இன்று வரை நம்
காதல் இருட்டிலே ....
ஏனடா ஏமாற்றி சென்றாய்
என்னை சொல்....
பிரிவு உனக்கும் எனக்கும்
மட்டுமே -நம்
காதல் நினைவுகளுக்கு இல்லை ...
நம் நினைவுகள் போதுமடா....
என் மரணம் வரை...