அன்பே நீ வந்தபோது -7நீ ஒரு வரம்தான்
சொர்க்கத்தின் வாசலில்
ஊமைக் குயில்கள்
பாடியா வரவேற்கும்
பறந்துதான் வரவேற்கும்!
உன் கண்களைப்போல!
நீ குனிந்து
பார்க்கும்போது
அந்த ஆகாயம்
உன் பாதங்களில்
பணிவாக இறங்குகிறது!
நீ நிமிர்ந்தால்
பூ மேடை
குனிந்தால் குளிரோடை
நடந்தால் நந்தவனம்!
காற்றிலாடும் தீபமாய்
கண்ணசைத்தாய் !
நிழல்களாய் புரண்டன
என் நினைவுகள்!
கொதிக்கிற
உன் பார்வையில்
உதிக்கிற சூரியன்கள்
ஏராளம்!
உலகத்தின்
அணு ஆயுதங்களை
அடக்கும் பார்வை
உன் பார்வை!
நாணத்தோடு
நீ பார்த்தால்
நட்சத்தர மழை
வரும்!
உன்
கண்ணடி பட்டால்
என் காலடி
எந்த வழியிலும்
வழுக்கும்!
கண்ணே,
கண்ணில் கொஞ்சம்
நிதானம் செய்
அதன்பிறகு உன்னை
தானம் செய்!
புதையலை
அள்ளி வந்த
பொற்சிலையே
என்னை வெட்டுவது
நீதானா!
உன் கண்ணைக்
கொஞ்சம் திற
கயலென நினைத்து
கங்கை வரட்டும்!
ஓடத்தைத் தாங்கும்
தண்ணீரைப் போன்ற
உன் தயவான பார்வை
என்னை
ஆனந்த எல்லைக்கே
அழைத்துச் செல்லும்!
தழுவாமல்
தாலாட்டும் ஜாடையில்
தள்ளாடும் நிலைதான்
அதிகம்!
அழகுக் கோட்டையே
உன் மேனியில்
கிடக்கிறது
இருவிழி வாசல்
எதற்கு நீ திறந்தாய்!
நான் எதோ உன்னிடம்
சொல்ல முயற்சித்தேன்
அதற்குள் நீ என்னை
கொல்ல முயற்சித்தாய்!
பார்க்காமல்கூட பேசிவிட்டு
பேச வேண்டியதை பார்த்துவிட்டாய்!
உன் ஆடை
அசைந்து வருவதற்குள்
நீ தென்றலாய்
போய் விடுவாய்!
நீ நாணத்தில்
திரும்பும்போது
அப்பப்பா...
நான் மட்டும்
தனியாகவா இருந்தேன்!
நீ
பார்த்து விட்டுப்
போன பிறகும்
நான்
பிழைத்துக் கொண்டேன்!
கண்டிப்பாக
நீ ஒரு வரம்தான்!
நீ என்னைத்
தொட்டுவிட்டப் பூவா
இல்லை என்மேல்
பட்டுவிட்ட தீயா!
இனியவளே,
என் நெய்வேலியில்
நின்றாயா!
பின்பு ஏன்
என உயிர்வேலியில்
ஓடுது மின்சாரம்!
நீ
காகிதக் கப்பல்
செய்தால்கூட
அது எனக்கு
கத்திக்கப்பல்தான்!
நீ முறித்து வைத்தால்
முருங்கை மட்டுமா
முளைக்கிறது!
அடியேனும் முளைப்பேன்
அன்பே உனக்காக!