காதல் அதனால் தான் பிடிக்கும்
ஒரு கவிதை பேசிடும் நாள்
உன் சம்மதம் சொல்லும் நாள்
என் காதலுக்கு உயிர் கிடைக்கும்
உன் வருகை வாழ வைக்கும்
சிறகென காதல் கொண்டு
வானத்தில் நான் பறக்க
ரசித்திடும் ஒவ்வொன்றும்
ஒரு கவிதையாய் ஜனிதிடுமே
முள்ளென வலி கொடுத்ததும்
மறந்திட மனம் மறக்கும்
காதல் அதனால் தான் பிடிக்கும்
மொத்தமாய் அனைவருக்கும்