காதல் வானில் -கயல்விழி

பணமே உலகம் என
பழகும் உறவுகளின்
நடுவே என்னை மட்டுமே
உலகமாய் நேசிக்கும் ஒருவன் .!

இப்படியும் ஓர் ஆணா
இவன் எனக்காக பிறந்தவனா
ஓராயிரம் கேள்விகள்
இதயத்தின் ஓரத்தில்

பேரழகி இல்லை நான்
பணமும் பொருளும் இல்லை என்னிடம்
பெற்றவர் சோதரர் என்று பெரும்
கூட்டமும் இல்லை என்னோடு

எதை நேசிக்கின்றான் என்னிடம்
இதுவரை எனக்கு புரியவில்லை

முட்கள் நிறைந்த என் பாதையில்
மலர்கள் தூவி செல்கின்றான்
கொடும் தீ என்னை எரிக்கையில்
குளிர் நீராகி என்னை நனைக்கின்றான்

என்ன தவம் செய்தேனோ
என்னவனாய் இவன் கிடைக்க

இன்னல்கள் இன்றி இனி
என்னவனோடு நானும் பறப்பேன்
காதல் வானில் .

எழுதியவர் : கயல்விழி (28-Nov-14, 7:23 am)
பார்வை : 323

மேலே