விருப்பத்தின் விசைகள் - இராஜ்குமார்
விருப்பத்தின் விசைகள்
=======================
சலவை கல்லில்
பதிந்த என்பாதம் - உன்
இல்லம் நோக்கியே நடக்குது ..!!
வெறுத்தப் பொழுதினில்
என்விரல் நகம் - உன்
முகம் காட்டும் கண்ணாடியானது .!
நீளும் பயணத்தோடு
ஓடும் என்னிதயம் - உன்
நிறுத்தத்தில் மட்டுமே நிற்குது ..!!
விருப்பத்தின் விசைகளில்
விரைவாகும் என்தேடல் - உன்
காதலின்றியே ஒருபுள்ளியில் புதையுது ..!!
- இராஜ்குமார்