சாத்தான் குடியேறுகிறான் - சித்ரா

தூக்கம் சொக்கி வழிந்திட
சோம்பல் நீயும் முறித்திட
பகலில் கூட படுக்கைப் போட
சாத்தான் குடியேறுகிறான்

பெற்றோர் அவர்கள் பிரிந்திட
ஒற்றை மரமாய் நின்றிட
கற்றதை மறந்து மற்றதை நினைக்க
சாத்தான் குடியேறுகிறான்

பருவம் கொஞ்சம் வளர்ந்திட
பார்ப்பவர் எல்லாம் பிடித்திட
பண்பதை இழந்து பைத்தியம் ஆக்கிட
சாத்தான் குடியேறுகிறான்

கோதை அவளோ போய்விட
பாதை நீயும் தடுமாறிட
போதை பழக்கம் உனை மாய்த்திட
சாத்தான் குடியேறுகிறான்

ஒருவேலை நீயும் தேடிட
தொழிற்சாலை உன்னை துரத்திட
பணமாலை பாவம் பாயிட
சாத்தான் குடியேறுகிறான்

இலட்சியம் கொண்டு வாழ்ந்திட
எச்சம்போல் உனை நடத்திட
இலட்சியத்தை நீயும் அலட்சியப் படுத்த
சாத்தான் குடியேறுகிறான்

வருத்தம் கொள்ள நேரமில்லை
தவிப்பும் தனிமையும் தவறில்லை
வலியை உடைத்து சிலையாய் வடிக்க
ஒரு தீபம் தானாய் எரிந்து விடும்
தெய்வம் விரும்பி அங்கே குடியேறும்..!

எழுதியவர் : சித்ரா (28-Nov-14, 4:22 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 87

மேலே