வேண்டாம் முரண்பாடுகள் -கயல்விழி
வக்கிரமான வார்த்தைகள்
வரைமுறை அற்ற பேச்சுகள்
விடுக்கொடுப்பும் கேள்விக்குறி
திருமண வாழ்வும் கேள்விக்குறி
மனங்கள் இணைந்தால் தான்
திருமணமாம் இங்கே
இணைந்த மனங்கள்
வெறும் பிணங்கள்
புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை
பிரிந்துசெல்ல நினைப்பதே உண்மை
மோகம் உள்ள முப்பது நாளிலும்
முழுவதும் அறிந்தவராய் முணுமுணுத்து கொள்வார்கள்
காதுகளில்
ஆசை உள்ள அறுபது நாளில்
ஆட்டம் போடுவார்கள் தனை
மறந்து
மோகத்தின் முனங்களில்
ஆசையின் உச்சத்தில்
வளரும் அழகிய பயிரொண்டு
அந்தோ பரிதாபம்
அடங்கிடும் ஆட்டங்கள்
அழிந்திடும் ஆனந்தம்
ஆளுக்காள் பணம் தேட
அடகு வைப்பார் அன்பு தனை
அன்புக்காக ஏங்கும்
பயிர் ஆனந்தத்தை இழந்து
நிற்கும்
அறிந்துகொள்ள எவரும் இன்றி
முளையிலே வாடி நிற்கும்
வக்கிரமான சுடு வார்த்தை நீரில்
வளர்ந்து வரும் அரும்பதன்
எதிகாலம் தளிர் விடுமோ
ஏன் இந்த விபரீதம்
இன்றே சிந்தித்திடுங்கள்
இதற்கான தீர்வு தனை
முயற்சித்தால் வழியுண்டு
முரண்பாடுகள் இன்றி
வாழ்வும் உண்டு....