அரசியல்
![](https://eluthu.com/images/loading.gif)
'அரசியல்
அயோக்கியர்களின்
கடைசிப்புகலிடம்'-என்றார் ,
அன்றொருநாள்
அயல்நாட்டு
அறிஞர் ஒருவர் .
சொன்னவர் மேதைதான்... !
ஆனாலும் அவர்
சொன்னதை ஏற்றுக்கொள்வதெப்படி ?
அரசியல்
மக்கள்பணி,
மகத்தான பணி.
அது ,
பொதுப்பணி ..
புனிதப்பணி .
நீதி -நேர்மை
ஒழுக்கம் -உண்மை
நம்பிக்கை -நாணயம்
சுத்தம் -சுயமரியாதை
அனைத்தும் உள்ளவர்கள்தான்
அரசியல் சதுரங்கத்தில்
ஆடி வெற்றிபெறமுடியும்..!
அரசியல் களத்தில்
அநாகரீக மானவர்களுக்கு
நிரந்தர இடம்கிடையாது ..
நீடித்து இருக்கமுடியாது !
பயிர்களுக்கிடையே
களைகளைப்போல
அரசியலில்
ஆகாதவர்கள் இருந்தார்கள்
அந்தக்காலம் .
களைகளுக்கிடையே
பயிர்களைப்போல
அரசியலில் சில
அருந்தலைவர்கள்இருக்கிறார்கள்
இந்தக்காலம் .
நல்லவர் -கெட்டவர்
எண்ணிக்கையில்தான்
ஏற்றத்தாழ்வு !
ஒரேயடியாக
அரசியல்
அசுத்தமாகிவிடவில்லை .
'அரசியல் ஒரு சாக்கடை 'என்பர்!
இதனையும்எம்மால்
எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?
இந்தியத்திருநாட்டில்
இதய சுத்தமுள்ள
தன்னலமற்ற
தியாகத்தலைவர்கள்
எத்தனைபேர்கள் இருந்திருக்கிறார்கள் !
உடல் -பொருள் -ஆவி
அனைத்தையும்
பிறந்தபொன்னாட்டுக்கே
அர்ப்பணித்து
அரசியலுக்கு இலக்கணம் வகுத்த
அருந்தவத்தலைவர்கள்
எத்தனைபேர் வாழ்ந்திருக்கிறார்கள் !
பக்தியுடன் அன்னவர்கள்
பணியாற்றியஅரசியலை
சாக்கடைஎன்று சொன்னால்
சரிப்படுமா ?
சாக்கடை யல்ல அது
சந்தனத்தோட்டம்...!
'நமக்குவேண்டாம் அரசியல் '-என்று
நல்லவர்கள் எல்லாம்
உள்ளே வராமல்
ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்
கள்வர்களைப்போல !
'நமக்கு வேண்டும் அரசியல் '-என்று
கள்வர்கள் எல்லாம்
உள்ளேவந்து
ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்
நல்லவர்களைப்போல !
அரசியலுக்கு
நல்லவர்கள் வரவேண்டும்
நல்லவர் அல்லாதவரை
அரசியலைவிட்டு
அப்புறப்படுத்தவேண்டும் !
அப்போதுதான் அரசியல்
சுத்தப்படும் ..சுகப்படும் !
****** ****** ***** *****