ஆகட்டும் -கருணா

தோல்விகள் தந்த
ரணங்கள்
வெற்றிப் பாதைக்கு
விளக்குகளாகட்டும்!
தொடரும் சோதனைகள்
உரமேற்றும் வரங்களாகட்டும்!
இச்சைகள் கொண்ட
வாழ்க்கை துச்சமாகட்டும் !
இலட்சியக் கனவுகள்
இனிதே நனவாகட்டும் !
அதனால்
உனைவிட்டு
கவலைகள் ஓடட்டும் !

எழுதியவர் : கருணா (29-Nov-14, 8:01 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 110

மேலே