இடை நேர உணவு

இருப்பவனுக்கு
பர்கரும் பீஸ்ஷாவும்
இடைநேர உணவு

ஏழைக்கு
பழஞ்சோறும் பச்ச மிளகாயும்
இருந்தால் தான் உணவு

அடிவயிற்றில் ஈரத்துணியோடு
அறுவடை செய்கிறாள்
ஏழைத்தாய்

அடி வயிற்றில் அடித்து
ஆடம்பரமாய் வாழ்கிறாள்
பணக்கார பேய்

ஏழையின் உழைப்பின்
மாதத்தின் ஊதியம்
பணக்கார வாழ்வின்
இடைநேர உணவு .

எழுதியவர் : கயல்விழி (28-Nov-14, 5:43 pm)
பார்வை : 91

மேலே