மொழிக்கு உயிர் கொடு

மொழிக்கு உயிர் கொடு.
ஆங்கிலத்தில் காதல் கடிதம்
எழுதினாய் அர்த்தம் புரியவில்லை..
அப்படியே.. போட்டு விட்டேன்..
கண்ணிருந்தும் குருடனாய்
கையிருந்தும் முடவனாய்
வாயிருந்தும் ஊமையாய்..
உன் கடிதத்தை படிக்க
முடியாமல்..தவிக்கிறேன்
நான் கண்ணே..
தாய் மொழி. தமிழ் அல்லவா
தமிழ் மொழி நாம் உயிர் அல்லவா
மொழிக்கு உயிர் கொடுக்கலாமே...நீ..
நாம் காதலும் உயிர் பெறுமே
காதலிப்போம் உயிர் மெய்யோடு
காலமெல்லாம் நாம் வாழ..