ஆவியாய் அந்த காற்றில்லாத கிரகத்தில் நானும் அவளும்.................................


இருள் சூழ்ந்த இரவு நேரம்
முழுமதி நிலவின் ஒளியில்
அவளது இருப்பிடம் மட்டும்
அமைதியாய்

அந்த காய்ந்து போன மரத்தடியில்
அவள் துகில் கொண்டிருக்கிறாள்
இரவு குளிர் பணியில் அவளது உடல்
நாடு நடுங்குகிறது

அவள் மேல் படர்ந்து
என்னையே போர்வையாக்கினேன்
மனசெல்லாம் மத்தாப்பு
என் வாழ் நாளில் அவளுடன்
நெருக்கமாக இருப்பது இன்று தான்

அவள் உடலோ
அசை வற்று கிடக்கிறது
என் உடலோ சலிப்பற்று
கிடக்கிறது அவள் அருகேயே

அவளுக்கு காலையிலே
போட்ட பூக்கள் என்னும் வாடவில்லை
மனமோ இன்னும் தீரவில்லை
அவளுக்கு எதுவுமே கவலை இல்லை
நிம்மதியான தூக்கம்

அந்த மரத்தடியிலே
விஷத்தோடு சுற்றிய ஒரு நச்சு பாம்பு
என்னையும் கடிச்சிப்புட்டு
அவளையும் கடிக்க போச்சி
பாம்பு கடிச்ச வலிய நான் தாங்கிக்குவேன்
அவளால தங்கிக்க முடியுமா
அதனால பாம்பையும் கொன்னு புட்டு
சாய்ந்தேன் அவள் மேல்

எனக்குள் பாம்பின் விஷம்
ஏதேதோ செய்ய ஆனாலும் கவலை இல்லை
அவளது முகமே என் கண் முன் இருக்க
பார்வைகளும் மங்கி கொண்டது
கண்களோ மூடிக்கொண்டது

அவளோ விழித்துக்கொண்டால்
புன்னகையுடன் சேர்த்துக்கொண்டால்
இருவருமே பறந்தோம்
சாதி சமயம் இன்றி ஒரு அழகான
புது உலகத்திற்கு

பூமியிலே தோற்று
மரணத்திலே ஜெயித்து
ஆவியாய் அந்த காற்றில்லாத கிரகத்தில்
நானும் அவளும்.................................

எழுதியவர் : நந்தி (8-Apr-11, 12:43 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 416

மேலே