என்ன பைத்தியமுன்னு சொல்லுராங்காடி....................................
தளர்ந்து போன
என் கால்களுக்கு
உன்னை தேடி நடப்பது
சுமையாக தெரிய வில்லை
என் பார்வைகள்
உன்னை காண முடியாது
என்று தெரிந்தும்
உன்னையே தெளிவாக தேடுகிறது
உன் நினைப்பு
வரும் போதெல்லாம்
நீ நட்ட மரக்கன்று
வளந்து விட்டது அதோடு சாஞ்சிக்குவேன்
என் தாடியோடு
மறஞ்சி இருக்கும் என் காதல்
யாருக்கும் தெரியவில்ல
அத சொல்லவும் விருப்பமில்ல
மழைதண்ணி பட்டாலும்
நீ கொடுத்த முதல் கடிதம்
அழியவில்ல அது ஏன்னு
தெரிய வில்ல
என் தலையான மூட்டைக்குள்ள
உன்னிடம் இருந்து சேகரிச்ச
பொருட்க்களையும் உன் நினைவுகளையும்
கட்டி வச்சிருக்கேன் அதோடு தான்
நான் படுத்திருப்பேன்
நீ விரல் தீண்டிய இடமெல்லாம்
மறுத்து போச்சி
என் வயசோ உன்னையே நினச்சி
பழுத்துப் போச்சி
சாயங்கால வேலையில
நானும் கொஞ்சம் சாய்கையில
மணலோடு உருண்டுடுவேன்
உன் நினைவோடு புரண்டுடுவேன்
நானோ பழசாகி போனேன்
என் காதலோ என்னும்
பழசாக வில்ல
அந்த வயக்காட்டு குளத்து ஓரத்துல
நம்ம ரெண்டு பேரும் மீன் பிடிச்ச நியாபகம்
இப்போ அந்த குளமும் வத்தி போச்சி
மீன்களோ செத்துப்போச்சி
இன்றுவர எதையுமே மறக்கள
ஆனால் எதுவுமே நிலைக்கள
என் கிட்ட எதுவுமே இல்ல
நீ தந்த காதலை தவிர
உன் கூடவே சுத்துறேன்
உன் பெயரையே உச்சரிக்கிறேன்
என்ன பைத்தியமுன்னு
ஒதிக்கி வச்சிருக்காங்க
அவுங்களுக்கு எப்படி புள்ள தெரியும்
என் காதல பத்தி
என் கூடவே திரியும்
உன் நினைவுகள பத்தி
வழிப்போக்கனா திரியிறேன்
நானும் நீயும் சுற்றி திரிந்த
அந்த சாலையோரம் எங்கும்
முதுகிலே சிறு மூட்டை
அதிலே உன் நினைவுகளை சுமந்து
இன்றும் சுற்றி கொண்டிருக்கிறேன்
காணாத உன்னை
கண்டு விடுவேன் என்ற
நம்பிக்கையில்.................................அந்த சாலை வீதி எங்கும்
இப்படிக்கு..............................உன்னவன்